tamilnadu

ஸ்டவ் வெடித்து சிறுவன் பலி

தூத்துக்குடி, ஜூன் 8- தூத்துக்குடி அருகே முடி வைத்தானேந்தல் குறவர் காலனியை சேர்ந்தவர் ஆனந்தகுமார்  மகன் முத்து செல்வம் (12). இவர் கடந்த 30 ம் தேதி வீட்டிலிருந்த மண்ணெண்ணெய் ஸ்டவை பழுது பார்த்து விட்டு பின்னர்  பற்ற வைத்து சோதனை செய்தாராம். அப்போது அடுப்பு பயங்கர சத்ததுடன் வெடித்தது. இதில் படுகாயம் அடைந்த சிறுவனை உடனே தூத்துக்குடி அரசு  மருத்துவமனையில் சிகி ச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பல னின்றி ஞாயிறு இரவு  முத்து செல்வம் பரிதாபமாக  உயிரிழந்தார். இது குறித்த  புகாரின் பேரில் புதுக் கோட்டை இன்ஸ்பெக்டர் சர வண பெருமாள் வழக்குப்ப திந்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.