tamilnadu

img

என்.டி.பி.எல். தொழிலாளர்கள் விடிய விடிய போராட்டம் தூத்துக்குடியில் இரண்டாவது நாளாக தொடர்ந்தது

தூத்துக்குடி, ஜூன் 15- தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி என்.டி.பி.எல். அனல்மின் நிலைய தொழிலாளர்கள் (சிஐடியு) சார்பில்  2 ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம் தொடர்கிறது. தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இணை யான சம்பளம் வழங்க வேண்டும், தரமான  குடிநீர், கேண்டீன், உணவு அருந்தும் அறை,  பெண்களுக்கு கழிவறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்  ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு) சார்பில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு அனல்  மின் நிலையம் முன்பு காத்திருப்புப் போராட்  டம் துவங்கியது. என்டிபிஎல் நிர்வாகம் தரப்பில் நடை பெற்ற பேச்சுவார்த்தைகளில் தொழிலாளர் களின் கோரிக்கைகள் ஏற்கப்படாததால் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. அதனைத்  தொடர்ந்து இரவும் பகலும் காத்திருப்புப் போராட்டம் நடைபெறுகிறது.  போராட்டத்திற்கு மின் ஊழியர் மத்திய அமைப்பு, என்.டி.பி.எல் அனல் மின் நிலைய  சங்க செயலாளர் அப்பாத்துரை தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்டத் தலைவர் பேச்சிமுத்து முன்னிலை வகித்தார். சிஐ டியு சார்பில் மாவட்டச் செயலாளர் ரசல், கட்டு மான தொழிலாளர் சங்க மாவட்டச் செயலா ளர் மாரியப்பன், உப்பு தொழிலாளர் சங்க செய லாளர் சங்கரன், மின் ஊழியர் மத்திய அமைப்பு நிர்வாகி ரவி தாகூர், சிஐடியு நிர்வாகி கள் நாகராஜன், சுரேஷ், ராஜா உள்ளிட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். செவ் வாய் இரவு தூத்துக்குடி அனல்மின் நிலையம் முன்பு சாலையில் படுத்து உறங்கினர். இந்நிலையில் புதன்கிழமை அன்று தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வகுமார் தலை மையிலும் தெர்மல் காவல் நிலைய ஆய்வா ளர் தங்கராஜ் முன்னிலையிலும் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது இதில் சிஐ டியு சார்பில் மாவட்டச் செயலாளர் ரசல், மாவட்டத் தலைவர் பேச்சிமுத்து, மாவட்டப் பொருளாளர் அப்பாதுரை, டிடிபிஎஸ் செய லாளர் கணபதி சுரேஷ் மற்றும் என்டிபிஎல் நிர்வாகம் சார்பில் நிர்வாகிகள் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

;