tamilnadu

img

சென்னை சில்க்ஸ் கடையில் தீவிபத்து

கோவில் பட்டியில் உள்ள சென்னை சில்க்ஸ் கடையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடையில் இன்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த கட்டிடத்தின் ஒரு பகுதியில் ஏற்பட்ட  தீ, மளமளவென பரவி அடுத்தடுத்த தளங்களிலும் பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாகின. 
கடந்த 2017ம் ஆண்டு சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கடையில்  தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

;