தூத்துக்குடி, ஜூன் 21- தூத்துக்குடி ராஜகோபால் நகரை சேர்ந்தவர் ஆத்திமுத்து (60). இவர் தனது வீட்டு முன் வளர்ந்த மரத்தை வெட்டி கொ ண்டிருந்த போது, மேலே சென்ற மின்சார வயரில் கை பட்டதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனே அவரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைச்காக கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.