tamilnadu

img

தூத்துக்குடி நகரில் 4 பேருக்கு கொரோனா தொற்று போல்டன்புரம் பகுதி தனிமைப்படுத்தப்பட்டது

தூத்துக்குடி,ஜூன் 8 தூத்துக்குடி போல்டன்பு ரம் பகுதியில் 4 பேருக்கு  கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள தால் அப்பகுதி தனிமைப் படு த்தப்பட்டு உள்ளது. தூத்துக்குடி போல்டன்பு ரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கொ ரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தக வல் வெளியாகி உள்ளது.  இதையடுத்து அப்பகுதி தனி மைப்படு த்தப்பட்டுள்ளது. அப்பகுதிக்குள் வெளி நபர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. சுகாதார பணியாளர்கள் ஆய்வுபணியை தொடங்கியி ருக்கிறார்கள். வீடுவீடாக சென்று யாருக்காவது காய்ச்சல், சளி இருக்கிறதா? எத்தனை பேர் முதியோர் , எத்தனை பேர் சிறுவர்கள் என்பது குறித்தும் ஆய்வு நடந்து வருகிறது.  தூத்துக்குடி அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை யில் மொத்தம் 154 பேர் நோய்த்தொற்றின் காரண மாக சிகிச்சைக்காக உள்நோ யாளிகளாக அனுமதிக்கப் பட்டுள்ளதாக மருத்துவ மனை நிர்வாகம் தெரிவித் துள்ளது.  தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட போல்டன்புரம் பகுதியில் முதற்கட்டமாக 10 நபர்க ளுக்கு மேல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பி னர். தற்போது மீண்டும் அப்ப குதியில் கொரோனா வைரஸ்  தொற்று ஏற்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது

கூட்டாம்புளியில் பாதிப்பு 
தூத்துக்குடி அருகே கூட்டாம்புளியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடந்த  திருமண நிகழ்ச்சியில் மாப்பிள்ளை வீட்டார் சென்னையிலிருந்து வந்திருந்தனர். இந்நிலை யில் பெண்ணின் தகப்பனார் மற்றும் அவர்கள் வீட்டில்  வேலைபார்த்த பெண் ஒரு வர் மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த ஒருவர் மற்றும் சென்னையிலிருந்து வந்தி ருந்தவர்கள் மூலம் 3பேர்  உள்பட 8 பேருக்கு கொ ரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து புதுக் கோட்டை சுகாதார ஆய்வா ளர் காமாட்சி தலைமையில் பணியாளர்கள் கூட்டாம்பு ளியில் ஆய்வு பணியை தொடங்கியிருக்கிறார்கள். 2  வார காலம் கூட்டாம்புளி  கிராமம் கூடுதல் கவனத்து டன் கண்காணிக்கப்படும் என்று தெரிகிறது.

;