தூத்துக்குடி,ஜூலை 18- தூத்துக்குடியில் வெவ்வேறு பகுதிகளில் 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் உதவி ஆய்வாளர் மகராஜன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர்.அப்போது, டேவிஸ்புரம் ரோட்டில் கஞ்சாவுடன் நின்று கொண்டிருந்த மாதவன் நாயர் காலனியைச் சேர்ந்த முருகேசன் மகன் லோகநாதன் (20), மட்டக்கடை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ஆவுடையப்பன் மகன் மரிய விஜய குமார் (24) ஆகியோரிடமிருந்து 5 கிலோ கஞ்சா வை பறிமுதல் செய்து, கைது செய்தனர். இது தொடர்பாக தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் பிரேமா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் இருவர் கைது
தூத்துக்குடி வடபாகம் காவல் உதவி ஆய்வாளர் சிவராஜா தலைமையிலான போலீ சார் வெள்ளியன்று ரோந்து சென்றனர். அப்போது கஞ்சா பொட்டலங்களுடன் நின்று கொண்டிருந்த மாதவன் நாயர் காலனியைச் சேர்ந்த ரவீந்திரன் மகன் சூசை(20), திரேஸ் புரத்தைச் சேர்ந்த சாகுல்ஹமீது மகன் மீரான் முகைதீன் (19) ஆகிய 2பேரையும் கைது செய்த னர். அவர்களிடம் இருந்து தலா 500 கிராம் வீதம் 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.