tamilnadu

ஆசிரியர்களுக்குப் பயிற்சி வகுப்பு

குடவாசல், ஆக.10- திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பாக குடவாசலில் உள்ள வட்டார வள மையத்தில் 7, 8-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்ட  புத்தக பயிற்சி  வகுப்பு நடைபெற்று வருகிறது, இப்பயிற்சி ஒவ்வொரு பாடத்திற்கும் இரண்டு நாட்கள் வழங்குவதாக திட்டமிடப்பட்டு முதலில் ஆங்கிலம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கு 6, 7-ம் தேதிகளில் நடைபெற்றது. வியாழக்கிழமை அன்று தமிழ் பாடத்திலும் வெள்ளிக்கிழமை கணித பாடத்திலும் பயிற்சி நடைபெற்றது. பயிற்சி வகுப்பை வட்டார கல்வி அலுவலர் க.இளங்கோவன் துவக்கி வைத்து கருத்துரையாற்றினார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் கு.இரகுபதி கருத்துரை வழங்கினார். ஆங்கில பாடத்தில் 33 ஆசிரியர்களும், அறிவியல் பாடத்தில் 35 ஆசிரியர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டது. ஆங்கில பயிற்றுனர் எஸ்.பழனியப்பன், அண்ணாதுரை, அருள்குமார் மற்றும் அறிவியல் பாடத்திற்கு சுப்ரமணியன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் பயிற்சியினை வழங்கினர். இதன் ஏற்பாடுகளை மேற்பார்வையாளர் ரகுபதி மற்றும் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் பழனியப்பன் ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்தனர்.