அரசு நெல் கொள்முதல் விலை விவரம்
திருவாரூர், ஆக.10- திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூல மாக நடப்பு காரீஃப் மார்க்கெட்டிங் பருவம் 2019-2020 பரு வத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்குண்டான விலையை உயர்த்தி கீழ்கண்டவாறு 01.10.2019 முதல் வழங்க அரசு நிர்ணயம் செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. சன்னரகம்(“A” Grade) (குவிண்டால் ஒன்றுக்கு) ரூ.1,835 மற்றும் ஊக்கத் தொகை ரூ.70 மொத்தமாக ஆயிரத்து 905 எனவும் பொது ரகம் (குவிண்டால் ஒன்றுக்கு) ரூ.1.815 மற்றும் ஊக்கத் தொகை ரூ.50 மொத்தமாக ரூ.ஆயிரத்து 865 என அறிவித்துள்ளது. நடப்பு காரீப் மார்க்கெட்டிங் பருவம் 2019-20 கொள்முதல் பருவத்தில் திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாய மக்கள் தங்கள் சிட்டா, அடங்கல் விவர நகலினை சமர்ப்பித்து, நெல்லினை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து அதற்குரிய தொகையினை தங்களது வங்கி கணக்கில் வரவு வைக்க ஏதுவாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத்தின் நகலினையும் நேரடி நெல் கொள் முதல் நிலையங்களில் அளித்து பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விவசாயிகள் விற்பனை செய்யும் நெல்லிற்கு கொள்முதல் நிலையத்தில் யாருக்கும் எவ்வித தொகையும் வழங்க தேவை யில்லை. நெல் கொள்முதலில் ஏதேனும் தங்களுக்கு குறை பாடுகள் ஏற்படின் முதுநிலை மண்டல மேலாளர் திரு வாரூர் 04366- 222532, துணை மேலாளர், திருவாரூர் 94422 -25003, துணை மேலாளர் மன்னார்குடி 94871-71815 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்களுடைய குறைகளை தெரிவித்து உடனுக்குடன் சரி செய்து கொள்ள லாம் என மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் தெரிவித்துள்ளார்
.
உதவித் தொகை பெற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூர், அக்.10- பத்தாம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி மற்றும் அதற்கு மேலான கல்வித் தகுதிகளை பெற்று வேலைவாய்ப்பு அலு வலகத்தில் பதிவு செய்து, பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து 30.09.2019 அன்றைய நிலையில் ஐந்தாண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாற்றுத்திற னாளிகளை பொறுத்தமட்டில் வேலைவாய்ப்பு அலுவல கத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது. இத்திட்டத்தின் கீழ் பயன் பெற மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு ஏதும் கிடையாது. விரும்பும் மனுதாரர்கள் தங்களின் வேலைவாய்ப்பு அடை யாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங் களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். ஏற்கனவே உத வித்தொகை பெற்றவர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மனுதாரர்கள் நவம்பர் 29-ம் தேதி வரை அனைத்து அலுவலக வேலை நாட்க ளிலும் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்தில் இயங்கும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டப் பிரிவில் உரிய சான்றுடன் நேரில் ஆஜராகி சமர்ப் பிக்கலாம் என ஆட்சியரக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு குடை வழங்கல்
தஞ்சாவூர், அக்.10- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றிய கிழக்கு தொடக்கப்பள்ளியில் பயிலும் 98 மாணவர்களுக்கு நன்கொடையாளர்களால் குடை வழங்கப்பட்டது. பேராவூரணி ஊராட்சி ஒன்றிய கிழக்கு தொடக்கப் பள்ளியில் ஏறத்தாழ 100 மாணவ, மாணவிகள் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். நூறாண்டு பழமை வாய்ந்த இப்பள்ளியில் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். தற்போது, பருவமழைக் காலமாக இருப்பதால், மழை காரணமாக பள்ளிக்கு மாணவர்கள் வருகை பாதிக்கக்கூடாது என்ற நோக்கத்தில் பள்ளி கல்விப்புரவலர்களான தேவதாஸ் சாலை மில் ந.பழனிவேலு, கே.கே.நகரில் உணவகம் நடத்தி வரும் எம்.கணேசன் ஆகியோர் இணைந்து, தலா ரூ 110 மதிப்பிலான 98 குடைகளை மாணவர்களுக்கு வழங்கினர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ 11 ஆயிரம் ஆகும். இந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் பாலச்சந்தர், ஆசிரியர்கள் சுபா, சுபாஷ், பாலசுந்தரி, சுமதி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பழனிவேல், நிர்வாகி நா.வெங்க டேசன் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.