tamilnadu

img

தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழுவின் அமைப்புக் கூட்டம்

தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழுவின் முத்துப்பேட்டை கிளை அமைப்புக் கூட்டம் எம்.சாகுல் ஹமீது தலைமையில் நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் சி.செல்லதுரை துவக்கவுரையாற்றினார். இதில் கே.காதர்பாட்சா தலைவராகவும், கே.அஜ்மீர்கான் செயலாளராகவும், ஏ. சூசைமாணிக்கம் பொருளாளராகவும், எம்.சாகுல்அமீது எம்.அலி உசேன் ஆகியோர் துணைத் தலைவர் மற்றும் துணைச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டக்குழு உறுப்பினர் இப்ராகிம் சேட், சிபிஎம் ஒன்றிய செயலாளர் கே.பாலசுப்பிரமணியன், உறுப்பினர்  பி.வி.கனகசுந்தரம் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.