tamilnadu

பத்திரிகையாளர்களுக்கு மனைப்பட்டா கேட்டு தமிழக முதல்வரிடம் மனு

திருவாரூர், ஆக.29 - கோவிட்-19 தடுப்பு பணி கள் மற்றும் அரசு பணிகள்  குறித்த ஆய்வுக் கூட்ட த்திற்காக தமிழக முதலமை ச்சர் எடப்பாடி கே.பழனி ச்சாமி வெள்ளியன்று திருவா ரூருக்கு வருகை தந்தார். மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற ஆய்வு க்கூட்டத்தில் பங்கேற்று நல த்திட்ட உதவிகளை வழங்கி னார். அப்போது அவரிடம் திருவாரூர் மாவட்ட செய்தி யாளர்களுக்கு சலுகை விலை மனைப்பட்டா வழ ங்கக் கேட்டு செய்தியாளர்க ளின் சார்பில் மனு அளி க்கப்பட்டது. அனைத்து செய்தி மற்றும் ஊடகத்துறை கூட்டமைப்பின் ஒருங்கி ணைப்பாளர் எஸ்.நவமணி கோரிக்கை மனுவினை அளித்தார். அந்த மனுவில், திருவா ரூர் மாவட்டம் தனி வருவாய் மாவட்டமாக உருவாகி 23 ஆண்டுகளுக்கும் மேலா கிறது. இதுவரை இந்த மாவட்டத்தில் செய்தியாளர் எவருக்கும் அரசின் சார்பில் வழங்கப்படும் சலுகை விலை மனைப்பட்டா வழங்க ப்படவில்லை. தொடர்ந்து  இதற்கான முயற்சி எடுக்க ப்பட்ட போதும் இந்த சலுகை பத்திரிகையாளர்களுக்கு கிடைக்கவில்லை. எனவே இக்கோரிக்கையின் மீது விரைவான நடவடிக்கை எடு த்து தகுதி வாய்ந்த பத்திரி கையாளர்கள் அனைவ ருக்கும் மனைப்பட்டா வழங்க வேண்டும். அதே போல தமிழக சட்டப்பேரவையில் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர்ராஜ் அறிவித்த வகை யில் பத்திரிகையாளர்கள் நல வாரியத்தை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். முன் கள பணியாளர்க ளோடு இணைந்து இந்த பேரி டர் காலத்தில் பணியாற்றிய பத்திரிகையாளர்கள் பலர் மரணமடைந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினர்க ளுக்கு அரசு அறிவித்த அடிப்படையில் 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வே ண்டும். மேலும் பத்திரிகை யாளர்களின் பாதுகாப்பி ற்கென உரிய வசதிகளை செய்து தர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. மனுவை தமிழக முதல்வ ரிடம் தமிழ்நாடு பத்திரிகையா ளர்களின் மாவட்ட தலைவர்  கே.நாகராஜன், பொருளா ளர் ஜி.ரவிச்சந்திரன் ஆகி யோர் அளித்தனர்.

;