திருவாரூர் டிச.21- அகில இந்திய எல்.ஐ.சி முகவர்கள் சங்க(லிகாய்) 17ம் ஆண்டு துவக்க விழா திருவாரூர் கிளையில் நடை பெற்றது. இவ்விழாவில் டி. நந்தகோபால் கிளை செய லாளர் தலைமையேற்றார். தஞ்சை கிழக்கு கோட்ட செயலாளர் இரா.கருணா நிதி சங்க கோடியேற்றி வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட செயலாளர் டி. முருகையன் நிரைவுரை யாற்றினார். சங்க பிரதி நிதிகள் தலைவர் நிதீஸ் சண் முகசுந்தரம், கோட்ட பிரதி நிதி எஸ்.செந்தில்குமார், திரு வாரூர் லிகாய் நிர்வாகிகள் அறிவழகன், எஸ்.மாரி முத்து, ஆர்.ரகுராஜ், எம்.தர்ம லிங்கம் வாழ்த்துரை வழங்கி னார்கள். உறுப்பினர்கள், ஊழியர்கள் நாற்பதுக்கு மேற்பட்ட கலந்து கொண்ட னர் பொருளாளர் நா.விஜய ராஜ் நன்றி கூறினார்.