tamilnadu

img

கபசுரக் குடிநீர் வழங்கல்

திருவாரூர், மே 23- திருவாரூர் மாவட்டம் நியு பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முன் மாவட்ட இந்தியன் ரெட்கிராஸ், மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ், தமிழ்நாடு பாரம்பரிய சித்த மருத்துவ கூட்டமைப்பு  சார்பாக கொரோனா தொற் றினை தடுக்கும் விதத்தில் உடலிற்கு எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் கபசுரக் குடிநீர் சுமார் 350 நபர்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சி யில், நியு பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் முரளீதரன், உடற்கல்வி ஆசி ரியர் பிரதீப், திருவாரூர் ஜே. ஆர்.சி மாவட்ட கன்வீனர் இரா.செந்தில்குமார், ஜே.ஆர்.சி பொறுப்பாசிரி யர்கள் இர.சரவணக்குமார், விவேகானந்தன், பாரதி, சித்த மருத்துவ கூட்டமைப்பு உறுப்பினர்கள் முருகதாஸ், வழக்கறிஞர் இராஜேந்திரன், லிம்கா மோகன் கலந்து கொண்டனர்.