தஞ்சாவூர், ஆக.6- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூர ணியில் அண்ணா சிலை அருகில் மதிமுக சார்பில் பொதுமக்களுக்கு, கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. பேராவூரணி பேரூர் கழகம், சேது பாவாசத்திரம் ஒன்றியக் கழகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மதிமுக நகரச் செயலாளர் க.குமார் தலைமை வகித்தார். மாவட்டப் பிரதி நிதி சுப.பெரியசாமி வரவேற்றார். டாக்டர் துரை.நீலகண்டன் கபசுரக் குடிநீர் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் வ.பாலசுப்பிரமணியன், பேராவூரணி ஒன்றியப் பொறுப்பா ளர் எஸ்.மணிவாசன், நிர்வாகிகள் சூரி.சேதுராமன், பி.எஸ்.அப்துல்லா, சாஞ்சி ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஆர்.கண்ணன் நன்றி கூறினார்.