திருவாரூர், நவ.27- சென்னையில் நடைபெறவுள்ள சிஐடியு அகில இந்திய மாநாட்டிற்கு நிதி வழங்கிட தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனம் தீவிரமாக களம் இறங்கி யுள்ளது. இதனையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் சங்க ஆதரவாளர்கள் பலரையும் சந்தித்து மாவட்ட செயல் தலைவர் ஆர்.சோமசுந்தரம், மாவட்டத் தலைவர் டி.முருகையன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.செல்வம் ஆகியோர் நிதி திரட்டினர். முதல் தவணையாக ரூபாய் நாற்பதாயிரத்தை மாநிலத் தலை வர் ஆ.கிருஷ்ணமூர்த்தியிடம் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி எஸ்.ராமகிருஷ்ணன் வழங்கினார். சங்க நிர்வாகிகள் உடனி ருந்தனர்.