tamilnadu

img

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிடுக: சிபிஎம் போராட்டம்

குடவாசல், மே 21- ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டாட்சியரிடம் மனுக் கொடுக்கும் போராட்டம் நடை பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் குடவாசல் ஒன்றியச் செயலா ளர் ஆர்.லட்சுமி தலைமை தாங்கி னார். மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் நா.பாலசுப்பிரமணியன் கோரிக் கையை விளக்கி பேசினார். மாவட் டக்குழு உறுப்பினர் எப்.கெரக்கோரி யா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் டி.ஜி.சேகர், கே.ராம்தாஸ் உள்ளிட் டோர் தனிநபர் இடைவெளியை கடைபிடித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டத் தின் நிறைவாக குடவாசல் வட்டாட் சியர் பரஞ்சோதியிடம் கோரிக்கை அடங்கிய மனு கொடுக்கப்பட்டது. வலங்கைமான் ஒன்றியத்தில் கட்சியின் ஒன்றியச் செயலாளர் என். ராதா தலைமையில் மனுக் கொ டுக்கும் போராட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.சேகர் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி உரையாற்றி னார். மாவட்டக் குழு உறுப்பி னர் கே.சுப்பிரமணியன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் என்.பாலையா, எஸ்.சாமிநாதன், டி. சண்முகம் உள்ளிட்டோர் போராட் டத்தில் பங்கேற்றனர். நிறைவாக வட்டாட்சியரிடம் மனு கொடுக்கப் பட்டது. கட்சியின் சார்பாக நீடாமங்க லத்தில் நடைபெற்ற போராட்டத்தி ற்கு சிபிஎம் ஒன்றியச் செயலாளர் சோம.ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வி.எஸ்.கலியபெரு மாள், பி.கந்தசாமி, மாவட்டக் குழு  உறுப்பினர் கே.கைலாசம், கொர டாச்சேரி ஒன்றிய செயலாளர் கே. சீனிவாசன், ஒன்றிய குழு உறுப்பி னர் கு.முனியாண்டி, வி.பூசாந்தி ரன், டி.ஜான்கென்னடி, ஏ.அண்ணா துரை, மாதர் சங்கம் மாவட்ட தலை வர் ஆர்.சுமதி, நகர செயலாளர் சிடி. ஜோசப், கொரடாச்சேரி விவசாயி கள் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் பி.பரமசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;