tamilnadu

img

கந்துவட்டிக்கு பலியானோர் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கிடுக - சிஐடியு ஆர்ப்பாட்டம்

நாமக்கல், ஆக. 29- நாமக்கல் அருகே கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட தம்பதியரின் குழந்தைக ளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு விசைத்தறி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு, கைலாசம்பாளையத்தில் கந்துவட்டிக் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட சுப்பி ரமணி-மேகனா தம்பதியரின் இரு குழந்தைகளை அரசு பாதுகாத்திட உரிய நிவாரணம் வழங்க வேண் டும்.

கந்துவட்டி மற்றும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களிடம் கடன் வாங்கிய பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலும், மிரட்டலும் தொடர்ந்து வருவதால் பொது மக்கள் வாங்கிய கடன்களை தள்ளு படி செய்ய வேண்டும் என உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி சிஐடியு விசைத்தறித் தொழி லாளர் சங்கத்தினர் ஆவாரங்காடு சந்தைத் திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐ டியு பள்ளிபாளையம் ஒன்றியத் தலைவர் அங்கமுத்து தலைமை வகித்தார். இதில், மாவட்டத் தலை வர் அசோகன், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் மோகன், ஒன்றியச் செயலாளர் ஆர்.ரவி, ஒன்றியக்குழு உறுப்பினர் அசன் சம்பூரணம் உள் ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.