கோவை, ஆக. 2 - கோவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணியினை நக ராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார். இதன்பின்னர் அமைச் சர் தெரிவித்ததாவது, கோவையில் மொத்தம் 22 மாநகரப்பகுதிகள், 9 ஊர கப்பகுதிகள் உள்ள 115 தெருக்கள் தனிமைப்படுத் தப்பட்ட பகுதிகளாக அறி விக்கப்பட்டுள்ளது.
அவ் வாறு தனிமைப்படுத்தப்ப டும் பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு 14 வகை யான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் பணி தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், அமைப்புசார தொழிலாளர்களுக்கு உதவித் தொகையுடன், அத் தியாவசியப் பொருட்கள் வழங்குதல், சாலையோர வியாபாரிகளுக்கு உதவித் தொகை வழங்குதல் என பல்வேறு தரப்பினரின் உணவுப்பாதுகாப்பினை உறுதி செய்ததுடன், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகை யில் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரி வித்தார்.