tamilnadu

சிட்டி யூனியன் வங்கி புதிய தலைவர் நியமனம்

மன்னார்குடி, ஏப்.15- சிட்டி யூனியன் வங்கியின்தலைவராக இயக்குநர் மோகனை நியமிக்க ரிசர்வ்வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கியின் தலைவராக பணியாற்றி வரும் மகாலிங்கம் மே 3 ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். இதனைத் தொடர்ந்து வங்கிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுப்பது தொடர்பாக வங்கியின் நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில்தற்போது வங்கி இயக்குநராக பணியாற்றும் மோகனை, வங்கியின் தலைவராக நியமிக்க ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைக்கப்பட்டது. இதை ரிசர்வ் வங்கி ஏற்றுக் கொண்டு இயக்குநர் மோகனை சிட்டி யூனியன் வங்கி தலைவராக நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து வரும் மே 4 ஆம்தேதி மோகன், சிட்டி யூனியன்வங்கித் தலைவராக பொறுப்பேற்கிறார்.  

;