tamilnadu

ஆக.28 முதல் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை துவக்கம்

மன்னார்குடி, ஆக.22-  தமிழகத்தில் உள்ள 109 அரசு கலை மற்றும்  அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்  படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை 28.8.2020 முதல் துவங்குகிறது. இதற்கான வழி காட்டு நெறிமுறைகள் ஆக.21 அன்று உயர் கல்வித் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்கான பூர்வாங்க பணி கள் அந்தந்த அரசு கல்லூரிகளில்  துவக்கப்ப ட்டுள்ளன. உயர் கல்வித் துறையால் வெளியி டப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் குறி ப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வரு மாறு: கலை மற்றும் அறிவியல் பட்டப் படிப்பி ற்காக விண்ணப்பித்துள்ள மாணவர்கள் உரியஆவணங்களை பதிவேற்றம் செய்யா மல் இருந்திருந்தால் அவர்களது தொலை பேசி எண்களில் தொடர்பு கொண்டு ஆவணம்  மற்றும் சான்றிதழ்களை இணைய வழியில்  பெற்று சரிபாத்திடல் வேண்டும். மாணவ ர்களை தொடர்பு கொண்ட விவரங்கள் அந்த ந்த கல்லூரி நிர்வாகங்களால் பதிவு செய்ய ப்பட வேண்டும். 18.7.2020 ஆம் நாள் வெளியி டப்பட்ட உயர் கல்வித்துறையின் இரண்டு அர சாணைகளை பின்பற்றி பாட வாரியாகவும் சிற ப்புப் பிரிவுகள் வாரியாகவும் தரவரிசை பட்டி யல் தயார் செய்யப்பட வேண்டும்.

ஒவ்வொரு பாட பிரிவுகளுக்கும் இட ஒது க்கீடு நெறிமுறைகளின்படி தகுதி வா ய்ந்தோர் பட்டியல் தவறாது தயார் செய்ய ப்பட வேண்டும். ஒரு மாணவர் ஒன்றுக்கும் மேற்பட்ட தகுதியுள்ள பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்திருந்தால் அதனை கண்டறிந்து அந்த மாணவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது விருப்பத்தின் அடிப்படையில் ஒப்புதல் கடிதம் பெற்று ஒது க்கீடு செய்யப்பட வேண்டும் .தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால் விண்ண ப்பத்தில் குறிப்பிடப்பட்ட விருப்ப வரிசை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யலாம். ஆனால் மாணவரை தொடர்பு கொண்ட விப ரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு பாட பிரிவுகளுக்கும் மாண வர் சேர்க்கைக்கு தெரிவு செய்யப்பட்ட விவ ரத்தை ஆக.26-க்குள் மின்னஞ்சல் குறு ஞ்செய்தி மூலமாக மாணவர் சேர்க்கை பற்றிய  வழிமுறைகள் மற்றும் கட்டண விபரங்களை தெளிவாக தெரிவித்திட வேண்டும். முதலில் சிறப்பு பிரிவினருக்கான இடங்களையும் அத னைத் தொடர்ந்து பொது பிரிவினருக்கான இட ங்களையும் நிரப்பிட வேண்டும். இது பற்றிய முன் அறிவிப்புகளை இணை யதளம் மற்றும் பத்திரிக்கைகளில் வெளியி டுதல் வேண்டும்.

சிறப்பு பிரிவினருக்கான சேர்க்கையை ஆக.28 அன்று நடத்திடவும் பொதுப் பிரிவினருக்கான சேர்க்கையை ஆக.29 முதல் துவங்கி செப்.4-க்குள் முத ற்கட்ட மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும். இவ்வாறு உயர் கல்வித் துறை யால் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறை களில் குறிப்பிடப்பட்டுள்ளது.  கடந்த கல்வியாண்டில் பின்பற்றியதை போல 20 விழுக்காடு கூடுதல் இடங்களுக்க ளுக்கான அரசின் ஒப்புதல் கோரப்படும் என்றும் அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. - ப.தெட்சிணாமூர்த்தி

;