சேலம், ஆக. 16 – சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2020-2021 ஆம் கல்வியாண்டிற் கான புதிய மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தகவல் தெரிவித்துள் ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தெரி வித்துள்ளதாவது, சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2020-2021 ஆம் கல்வியாண்டிற்கான 1 ஆம் வகுப்பு, 6 ஆம் வகுப்பு மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை திங்கள் (இன்று) முதல் நடைபெறும்.
மேலும், ஒரு பள்ளியி லிருந்து வேறொரு பள்ளிக்கு மாறுவதன் காரண மாக பிற வகுப்புகளில் (2ஆம் வகுப்பு - 10ஆம் வகுப்பு) சேறும் மாணவர்களுக்கான சேர்க்கையும் நடைபெறும். அனைத்து மேல்நிலைப் பள்ளிக ளிலும் மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை ஆக. 24ஆம் தேதி முதல் நடைபெறும். மேலும், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாண வர் சேர்க்கை நடைபெறும் நாளன்றே விலையில்லா பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப்பை, சீருடை மற்றும் இதர கல்விசார் பொருட்களை வழங்க தெரிவிக்கப்பட்டுள்ளது, இவ்வாறு மாவட்ட ஆட்சி யர் தெரிவித்துள்ளார்.