tamilnadu

img

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை துவக்கம்

சிதம்பரம்:
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் நடப்பு 20-21ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பல்கலை. பதிவாளர் கிருஷ்ணமோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான பட்டம், ஒருங்கிணைந்த முதுகலை பட்டயம் சான்றிதழ் படிப்புகள் மற்றும் வேலைவாய்ப்புள்ள செயல்திறன் படிப்புகளும் வழங்கப் படுகின்றன.ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுகலை பட்டப்படிப்புகள் அனைத்தும் மாநில அரசின் அங்கீகாரம் பெற்றவையாகும். மாணவர்கள் வரும் ஆகஸ்டு மாதம் 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழக இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் (www.annamalaiuniversity.ac.in).அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் படிப்பிற்கான சேர்க்கை தமிழ் நாடு பொறியியல் கலந்தாய்வு மூலமும், மருத்துவம், பல் மருத்துவம் சேர்க்கை மாநில அரசின் ஒருங்கிணைந்த கலந்தாய்வு மூலமும் நடைபெறும்.விவசாயம், தோட்டக்கலை, செவிலியர் மற்றும் மருந்தாளுனர் படிப்பிற்கான கலந்தாய்வு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இணையதளம் (ஆன்லைன்) மூலம் நடைபெறும்.இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை முற்றிலும் இணையம் (ஆன்லைன்) வழியாக நடைபெறும். ஆகவே மாணவர்கள் தங்களுடைய அனைத்து சான்றிதழ்களையும் விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.