சிதம்பரம், மே 5- அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புலத்தி லுள்ள நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் கொரோனா விழிப்பு ணர்வு வீடியோவை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன.
இந்தச் சூழலில் தமிழக அரசு மற்றும் மாநில நாட்டு நலப்பணியின் சார்பில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளுக்கு இடையே சிறந்த கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கான போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புல நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ராஜ் பிரவீன் ஆலோசனைப்படி தங்கள் வீடுகளிலிருந்து கொரோனா விழிப்புணர்வு குறித்த வீடியோவை உருவாக்கியுள்ளனர். தற்போது இந்த புதிய கொரோனா விழிப்புணர்வு வீடியோ பல சமூக தளங்களில் மாணவர்கள் வெளியீடு செய்து பலதரப்பு மக்களால் பாராட்டப்பட்டு வருகிறது.