tamilnadu

img

குடும்பத்துடன் ஊர்வலம்: தேஜோ ஆலை தொழிலாளர்கள் கைது

திருவள்ளூர், மே 6- சோழவரத்தை அடுத்த அழிஞ்சிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட இருளிப்பட்டில் தேஜோ தொழிற்சாலை தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்தமாதம் 23 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திங்களன்று இந்தப்போராட்டம் 14 வது நாளை எட்டியது. கோரிக்கைகளை வலியுறுத்தி குடும்பத்துடன் ஊர்வலமாக செல்ல முயன்ற 300 பெண்கள் உள்பட 500க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைதுசெய்தனர். போராட்டத்திற்கு சிஐடியு திருவள்ளூர் மாவட்டத் தலைவர் கே.விஜயன் தலைமை தாங்கினார். இதில் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாவட்டதுணைச் செயலாளர்கள் கே.அர்ஜூணன்,சந்திரசேகரன், மாவட்டத் துணை தலைவர்கள் என்.நித்தியானந்தம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.எம்.அனீப், ஏ.நடராஜன், கே.ஜி.முரளி, கம்பெனி நிர்வாகிகள் பாலாஜி, லோகநாதன் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தமிழக அரசு உடனடியாக தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று தொழிற்சங்கத் தலைவர்கள் கூறினார். காவல்துறையினரின் ஜனநாயக விரோத போக்கையும் அவர்கள் கண்டித்தனர்.

;