திருவள்ளூர், ஆக. 16 - அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கேட்டு முட்டிப்போட்டு நூதனப் போராட்டம் நடத்திய பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர். திருநின்றியூர் பேரூராட்சி, பெரியார் நக ரில் (13-வது வார்டு) 3 ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் வசிக்கின்றனர். இந்த பகுதியில் 1993ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த குழந்தை கள் வளர்ச்சி திட்டம் மற்றும் மேம்படுத்தப் பட்ட குழந்தைகள் மையம் ஏற்படுத்தப் பட்டது. இந்த மையத்தில் சுமார் 20 குழந்தை கள் பயில்கின்றனர். இந்தக் கட்டிடம் பழுதடைந்தது 8 ஆண்டு களாகிறது. எப்போது இடிந்து விழும் என்று தெரியாத ஆபத்தானநிலை உள்ளது. எனவே, குழந்தைகளை அருகில் உள்ள ஒரு வீட்டில் வைத்து பராமரிக்கப்படுகின்றனர். இருப்பினும், இம்மையத்தில்தான் குழந் தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார் கள் ஆகியோருக்கு தடுப்பு ஊசிகள் போடப் படுகிறது. அந்த மையத்திற்கு செல்லும் இணைப்பு சாலைகள் சேறும், சகதியுமாக உள்ளது. மழைக் காலங்களில் வெள்ளம் சூழந்து கொள்வதால் தாய்மார்கள் மையத் திற்கு செல்ல முடியாமல் தத்தளிக்கின்றனர். பெரியார் நகர் பகுதிக்கு 20-நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் விநியோகிக்கிறது. எனவே, பொதுமக்கள் தனியார் டேங்கர் லாரி களை நம்பியுள்ள அவலம் உள்ளது. இந்நிலையில், குழந்தைகள் மையத் திற்கு புதிய கட்டிடம் கட்டுவதோடு, இணைப்பு சாலைகள் சீரமைக்க வேண்டும், மூன்று நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க வேண் டும் என வலியுறுத்தி அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தினர் வெள்ளியன்று (ஆக.16) அங்கன்வாடி மையம் அருகே காலிக் குடங்களுடன் முட்டிபோட்டு போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்திற்கு சங்கத்தின் பூந்த மல்லி பகுதி செயலாளர் எம்.பவுர்ணமி தலைமை தாங்கினார். போராட்டத்தில் பங்கேற்ற பகுதி தலைவர் கே.கெஜலட்சுமி, துணைத் தலைவர் டி.பச்சையம்மாள், முன்னாள் கவுன்சிலர் ஜே.ராபர்ட் எபிநேசர், சிபிஎம் ஒன்றிய செயலாளர் வி.அறிவழகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.