tamilnadu

வெளிமாநில தொழிலாளர்கள் செல்ல 3 இடங்களிலிருந்து ரயில் இயக்குக சிபிஎம் வலியுறுத்தல்

திருவள்ளூர், மே 11 - திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெளிமாநிலத் தொழிலா ளர்கள் சொந்த ஊர் செல்ல 3 இடங்க ளில் இருந்து ரயில் இயக்க வேண்டு மென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக கட்சியின் திரு வள்ளூர் மாவட்டச் செயலாளர் எஸ். கோபால் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர், மீஞ்சூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, சோழ வரம், பூந்தமல்லி உள்ளிட்டு மாவட்  டம் முழுவதும் லட்சக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக, பீகார், ஒடிசா, மத்திய பிரதேஷ், மேற்கு வங்கம், ஜார்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஏராளமனோர் உள்ளனர். இரும்பு உருக்கு ஆலைகள், அனல் மின் நிலையங்கள், கப்பல் கட்டும் நிறு வனம், குடோன்கள், செங்கல் சூளை கள் போன்றவற்றில் குறைந்த கூலிக்கு பணியாற்றி வருகிறார்கள்.

கடற்கரை பகுதியில் அமைந்துள்ள எல் அண்ட் டி கப்பல்  கட்டும் தொழிற்சாலையில் ஆயி ரத்திற்கு மேற்பட்ட வடமாநில தொழி லாளர்கள் ஒப்பந்த கூலிகளாக  பணிபுரிகின்றனர். இந்த தொழி லாளர்கள் தொழிற்சாலையிக்கு அருகாமையிலேயே சுகாதாரமற்ற முறையில் தகரத்தால் ஆன அறை யில் தங்க வைக்கப்பட்டு, வேலை வாங்கப்பட்டு வந்தனர். இதே நிலை மாவட்டம் முழுவதும் உள்ளது. ஊரடங்கால், சொந்த ஊர் செல்ல முடியாத காரணத்தால் தக ரக்கொட்டைகளில் தனிமனி வில கல் இன்றி தங்கி உள்ளனர். கம்பெனி யில் பராமரிப்பு உள்ளிட்ட பணி களுக்கு சுழற்சி முறையில் சென்று  வருகின்றனர். தற்போது புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தமிழக அரசு ரயில்களை இயக்கி வருகிறது. எல் அண்டு டி தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப விரும்புகின்றனர். ஆனால் நிர்வாகம் அவர்களை தடுத்து வேலைக்கு வர கட்டாயப்ப டுத்துகிறது.

ஏப்ரல் மாத சம்பளத்தை வழங்காமல் உள்ளது. எனவே, மே 7ந் தேதி முதல் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல மறுத்து வரு கின்றனர். மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது. இதனை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகம் தனது போக்கை கைவிட்டு  ஊதிய நிலுவையை பெற்றுத்தர வேண்டும். வெளிமாநிலத் தொழிலா ளர்களை சொந்த ஊர்களுக்கு செல்ல திருவள்ளூர், ஆவடி, கும்மி டிப்பூண்டி ஆகிய ரயில் நிலையங்க ளிருந்து சிறப்பு ரயில்களை இயக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

செங்கல்பட்டிலிருந்து சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் செல்வதற்கு ஏதுவாக செங்கல்பட்டிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் இ.சங்கர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட செங்கல்பட்டு, திருப்போரூர், திருக்கழுக்குன்றம், கல்பாக்கம், மதுராந்தகம், தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட இதர வட்டங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் தங்கி வேலை செய்கின்றனர். குறிப்பாக, ஆந்திரா, ஒரிசா, மேற்கு வங்கம், ஜார்கண்ட், உத்திரப்பிரதேசம், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவல் உள்ளனர். இந்த தொழிலாளர்கள் கட்டுமானம், தொழிற்சாலை, உணவகங்கள் என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

கொரானா தொற்று பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக தொழில்கள் முடங்கியுள்ளன. இதனால் வெளிமாநிலத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு செல்ல சிறப்பு ரயில் இயக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க கோரி வருகின்றனர். எனவே, செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து வட மாநிலங்களுக்குச் செல்ல சிறப்பு ரயில் இயக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

;