திருமுல்லைவாயில் சிவன்கோயில் பின்புறம் உள்ள மாநகராட்சி உயர் நிலைப் பள்ளிக்கு செல்லும் மாசிலாமணி ஈஸ்வரர் நகர் 1ஆவது தெரு முழுவதும் மழைநீர் தேங்கி நிற்பதால், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் குடியிருப்பவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். ஆவடி மாநகராட்சி தேங்கி நிற்கும் மழைநீரை வடிகால் அமைத்து வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.