tamilnadu

img

வாலிபர்கள் ஆர்ப்பாட்டம்

அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும், அரசு பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் உணவு வழங்க வேண்டும், இந்தி மொழியை புகுத்துவதை தடைசெய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போளூரில்  ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் ம.பா.நந்தன், மாவட்ட நிர்வாகிகள் பி.சுந்தர், ந.அன்பரசன், ஆர்.சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கடலூர் மாவட்டம் திட்டக் குடியில் வட்டச் செயலாளர் பாண்டியன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.