tamilnadu

திருவண்ணாமலை நகராட்சியை கண்டித்து மார்ச் 14-ல் வணிகர்கள் கடையடைப்பு

திருவண்ணாமலை,மார்ச் 10- திருவண்ணாமலை நகராட்சியில், பாதாள  சாக்கடை வரி, குப்பை வரி, தொழில்வரி, குடி நீர்வரி உள்ளிட்ட வரிகளை அதிகபட்சமாக கேட்டு, வியாபாரிகளை மிரட்டும் தோரணை யில் பேசி, நகராட்சி ஊழியர்கள் வசூல் செய்து  வருவதாக வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.  திருவண்ணாமலையில் நகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டுகளில் பாதாள சாக்கடை  திட்டத்தை அமல்படுத்தாமல் 21 வார்டுகளில் மட்டும் அமல்படுத்திவிட்டு, மீதமுள்ள 18  வார்டுகளில் அமல்படுத்தப்படாத நிலையில்,  அனைத்து வார்டுகளிலும் வரி வசூல் செய்  வதை நகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும்  என வலியுறுத்தி, கடந்த பிப் 24 அன்று திரு வண்ணாமலை நகராட்சி அலுவலகம் முன்பு  மார்ச்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்பாட்டம் நடத்தியது.  இந்நிலையில், வரிவசூல் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வணிகர்கள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள், “பாதாள சாக்கடை, குழாய் வரி, திடக்கழிவு வரி பல மடங்கு உயர்த்தி வசூல் செய்யப்படுகிறது. ஐந்து ஆண்டுகள் முன் தேதியிட்டு ஒரே நேரத்தில் வசூலிக்கின்றனர்” என்றார். குப்பை வரி 2016 முதல் உள்ளது. மற்ற மாவட்டங்களில் 10 ரூபாயில் தொடங்கி 500  ரூபாயில் முடிக்கின்றனர். ஆனால் திரு வண்ணாமலையில் மூன்றாயிரம் நான்காயி ரம் ஆறாயிரம் ரூபாய் என ஏகத்துக்கும் வசூல் செய்கின்றனர். இந்த வசூல் செய்  வதை பழிவாங்கும் வகையில் அதிகாரிகள் செயல்படுகின்றனர். இது குறித்து, அமைச்சர்,  ஆட்சியர், ஆணையரிடம் முறையிட்டும் இது வரை தீர்வு கிடைக்கவில்லை என்றும் அவர்  கள் தெரிவித்தனர். இந்த வரி வசூல் செய்யும் முறை மிரட்டி  கந்துவட்டி வசூல் செய்வதைப் போல் உள்  ளது. இதனை நாங்கள் கண்டிக்கும் விதமாக  சனிக்கிழமை 14ஆம் தேதி திருவண்ணா மலை முழுவதும் கடையடைப்பு மற்றும்  போராட்டம் நடத்துவதாகவும் தெரிவித்தனர்.  பேட்டியின் போது, திருவண்ணாமலை வியாபாரிகள் சங்கத் தலைவர் தனக்கோடி, மாநில துணைத் தலைவர் ராஜசேகரன், கந்தன், பெருமாள், பழனி, பாலதயாநிதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

;