திருவண்ணாமலை, டிச.10- திருவண்ணாமலையில் கார்த்திகை தீபவிழா செவ் வாய்க்கிழமை (டிச. 10) நடைபெற்றது. திருவண்ணா மலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீப விழா உலகப் பிரசித்தி பெற் றது. இதைக் காண நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந் தும், வெளிநாடுகளிலிருந் தும் லட்சக்கணக்கான மக்கள் வருகின்றனர். இந்த ஆண்டுக்கான தீப விழா டிசம்பர் 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங் கியது. இதன் முக்கிய நிகழ் வான தீபவிழா செவ்வாய்க் கிழமை (டிச.10) நடைபெற் றது. மாலை 6 மணிக்கு மலை மீது தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலையில் நடைபெறும் தீபத் திருவிழா வின்போது மாடு, குதிரைச் சந்தைகள் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மாடு, குதிரைச் சந்தைகள் கடந்த 1 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை அரசு கலை, அறிவி யல் கல்லூரி அருகே உள்ள சந்தை மைதானத்தில் தொடங்கியது. திருவண்ணாமலை மட்டு மன்றி வேலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களி லிருந்து மாடுகள், கன்றுகள், குதிரைகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. ரூ.3 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை விலை கொண்ட மாடுகள், கறவை மாடுகளும், ரூ.10 ஆயிரம் முதல் ரூ.3.50 லட்சம் விலை யிலான குதிரைகளும் விற்ப னைக்கு வந்திருந்தன.