tamilnadu

img

நாகநதி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டு நீராதாரம் உயர்ந்ததால் நெல் சாகுபடி அதிகரிப்பு

திருவண்ணாமலை, ஜன. 29- திருவண்ணாமலை மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 2019-2020 ஆம் ஆண்டு 32 ஏரிகள், 5 அணைக்கட்டுகள் மொத்தம் ரூ.16.07 கோடி மதிப்பீட்டில் புணரமைக்கும் பணிகள் நடைபெற்றுள்ளது.  இதன் மூலம் 12,213 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெற்றுள்ளது. விவ சாயிகள் அதிக மகசூல்  ஈட்டி பெரிதும் பயனடைந்  துள்ளார்கள். இதன் மூலம் தண்ணீர் வீனாவதை தடுத்  தும், தண்ணீரினை சேமித்  தும், பாசன உறுதியளிக்க வும், நீர் ஆதாரத்தை பெருக்க வும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம்,  நாகநதி ஆற்றின் குறுக்கே,  கத்தாழம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள கொளத்தூர் அணைக்கட்டு தமிழ்நாடு முதலமைச்சரின் குடிமரா மத்து திட்டத்தின் கீழ் 2019-2020 ஆம் ஆண்டு ரூ.86.00 லட்சம் மதிப்பீட்டில் நீர்ப்பாசன ஆதாரங்கள் பலப்படுத்தப்பட்டு, புணர மைப்பு பணிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது. இந்த  அணைக்கட்டின் மூலம் கொளத்தூர் ஏரி, கண்ண மங்கலம் ஏரி, அழகுசேனை ஏரி, அம்மாபாளையம் ஏரி, ஆகிய ஏரிகள் சீரான நீர் ஆதாரம் பெற்று அதன் வாயி லாக அப்பகுதிகளைச் சேர்ந்த 673.47 ஹெக்டர் விவ சாய விளைநிலங்கள் பாசன  வசதி பெற்றுள்ளது. கொளத்தூர் அணைக் கட்டு புணரமைக்கும் பணி கள் மேற்கொள்வதற்கு முன்பு, அணைக்கட்டில் இருந்து வரும் கொளத்தூர் ஏரி தலைப்பு மதகு, மணற்  போக்கி மதகுகள் பழுத டைந்து, பெயர்ந்து, அடைப்பு  திறப்பு பலகைகள் பழுது  ஏற்பட்டு, பாசன காலங்களி லும், வெள்ளம் வரும் காலங்  களிலும் இப்பாசன ஆதாரங்  களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டு, ஏரிகளுக்கு தண் ணீர் கொண்டு செல்வது மிக வும் கடினமாக இருந்தது.  மேலும், கொளத்தூர் அணைக்கட்டில் தாங்குச்சு வர், தலைப்பு மதகு, மணல் போக்கி, தடுப்புச் சுவர்  மற்றும் ஷட்டர்கள் ஆகி யவை சேதமடைந்தும், பழுத டைந்தும் இருந்தது. தமிழ்நாடு முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் கொளத்தூர் அணைக்கட்டு புணரமைக்க ரூ.86.00 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்  யப்பட்டு தலைப்பு மதகு,  மணற்போக்கி மதகுகள்,  வரத்துக் கால்வாய், தற் காப்பு சுவர், ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்தின் மூலம், கொளத்தூர் அணைக்கட்டு சீர்செய்யப்பட்டு பருவ மழையால் கொளத்தூர் ஏரி நிரம்பியது. மேலும், இதன் கீழ் உள்ள கண்ணமங்கலம் ஏரி, அழகுசேனை ஏரி, அம்மாபாளையம் ஏரி, மேல்நகர் ஏரி ஆகிய நான்கு ஏரிகளும் நிரம்பி கோடி போனது. இதனால் நெல் உற்பத்தி பெருமளவில் நடைபெற்று வருகிறது. இதேபோல், ஆரணி வட்டம், மேல்நகர் கிராம ஏரிக்கு கால்வாய் இருந்தும் சுமார் 50 ஆண்டுகளாக ஏரிக்கு தண்ணீர் வர வில்லை. இந்நிலையில், குடி மராமத்து திட்டத்தின் கீழ்  கொளத்தூர் அணைக் கட்டினை சீர் செய்து, கால்வா யினை தூர்வாரியதால், தண்ணீர் வீனாகாமல் அம்மாபாளையம் ஏரி நிரம்பி  அதன் வழியாக மேல்நகர் ஏரிக்கு தண்ணீர் வந்து ஏரி  நிரம்பியுள்ளது குறிப்பிடத் தக்கது. 

;