tamilnadu

img

அரசு பேருந்து நடத்துனர் கொரோனாவுக்கு பலி

திருவண்ணாமலை:
கொரோனாவால் பாதிக்கப் பட்ட அரசு போக்குவரத்து நடத்துனர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம் திண்வனத்தை சேர்ந்த 50 வயதான அரசு போக்குவரத்து நடத்துனர் ருத்திரகுமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக் கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந் நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கொரோனாவால் உயிரிழந்த அரசு போக்குவரத்து நடந்துனர் ருத்திரகுமார் வந்தவாசி பணிமனையில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, விழுப்புரம் மாவட் டத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.திருவண்ணாமலை மாவட்டத் தில் அரசு பேருந்துகள் தனி நபர் இடைவெளியுடன் இயக்கினாலும், பேருந்து நிலையம், வழியில் ஏறும் பயணிகளால் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க முடியாத நிலை  ஏற்படுகிறது. இதனால் அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.கடந்த வாரம் செய்யாறு பணிமனையில் ஊழியர்கள் 8 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் கடந்த வாரம் முழுவதும் மூடப்பட்டிருந்த செய்யாறு பணிமனை தற்போதுதான் திறக் கப்பட்டது. மேலும், செங்கம் பணிமனையில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு கொரோனா தோற்று ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில், நடத்துனர் ருத்ரகுமார் பலியாகி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அரசு போக்குவரத்துக் கழகத்தில், பேருந்துகளை இயக்கும் நடத்துனர், ஓட்டுநர்களுக்கு உடல் வெப்பம் மட்டும் பரிசோதனை செய்யப்பட்டு, பணிக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். பணிக்குச் செல்லும் ஓட்டுநர், நடத்துனர்கள் இரவு பேருந்து நிறுத்தும் இடத்தில் பாதுகாப் பில்லாமல் தூங்கும் நிலை ஏற்படுகிறது. இதை  தவிர்க்கும் விதமாக,அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு கோவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டு, இரவு தங்குமிடங்களில் ஊழியர்களுக்கு, போதுமான பாதுகாப்பு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திதர வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

;