குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து தமிழ்நாடு தவ்ஹித்ஜமாஅத் சார்பில் திருவண்ணாமலை காமராஜர் சிலை முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் முஹம்மத் பைசல் உள்ளிட்டோர் பேசினர்.
*******************
குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறக் கோரி கிருஷ்ணகிரி அரசு கலை மற்றும் அறிவியல் ஆடவர் கல்லூரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கத்தின் கிளைத் தலைவர் ஞானசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் இளவரசன், தலைவர் சக்திவேல், கிளைச்செயலாளர் ஜான்சாமுவேல், துணைத்தலைவர் சூர்யா உள்ளிட்டோர் பேசினர்.