tamilnadu

மின்சாரம் தாக்கி குழந்தை பலி

திருவண்ணாமலை,மார்ச்.2- திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மின்சாரம் தாக்கி 2 வயது குழந்தை உயிரிழந்தது.  வெம்பாக்கம் வட்டம், நமண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நெசவுத் தொழி லாளி சுரேஷ். இவரது மனைவி சங்கீதா. இவர்ளுக்கு லோகித் ((4), மோனிஷ் (2) என இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில்,  சுரேஷ் குடும்பத்தாருடன் வீட்டில் தொலைக் காட்சி  பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, குழந்தை மோனிஷ் தொலைக் காட்சிக்குச் செல்லும் மின் வயரை பிடித்து இழுத்தாகத் தெரிகிறது.  அந்த மின் வயரில் ஏற்கெனவே எலி கடித்திருந்ததால், வயரில் இருந்து  மின்சாரம் பாய்ந்து குழந்தை மயக்கமடைந்தது. உடனடியாக குழந்தையை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை யில் அனுமதித்தனர். அங்கு குழந்தை மோனிஷ் உயிரிழந்தான். இது குறித்த புகாரின் பேரில் தூசி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.