நிவாரணத் தொகை, ஈமச் சடங்கு நிதியுதவி கேட்டு விண்ணப்பித்து பல ஆண்டுகளாகியும் நடவடிக்கை எடுக்காததையும், விண்ணப்பித்த மனுக்கள் தொலைந்து விட்டதாக அலட்சியம் காட்டுவதையும் கண்டித்து திருவண்ணாமலை நல அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் நிர்வாகிகள் ரமேஷ்பாபு, சி.ஏ.செல்வம், சத்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.