tamilnadu

img

5 ஆண்டுகளாக சீரழிந்து வரும் காரிய மேடை

திருவண்ணாமலை,மே 24-திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தில் 5  ஆண்டுக்கு முன்பு கட்டி முடிக்கப் பட்ட காரிய மேடை பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதால் பொது மக்கள் காரிய நிகழ்ச்சிக்காக நீண்டதூரம் செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக அரசு பணம் 50 ஆயிரம் வீணடிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் விண்ணுவம் பட்டு பகுதியில்  ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.இங்கு காரிய மேடை வசதி இல்லாததால், இறந்தவர்களுக்கு ஆற்றங்கரையோரங்களில் காரியம் செய்து வந்தார்கள். இப்பிரச்சனைக்கு தீர்வாக 2014 ஆம் ஆண்டு காரிய மேடை அமைக்க ரூ.50 ஆயிரம்  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, காரிய மேடை கட்டப்பட்டது. ஆனால், முறையான பராமரிப்பு இல்லாததால், சிதிலமடைந்து கிடக்கிறது. இதனால், இந்த இடத்தை பயன்படுத்த முடியாமல்,  பொதுமக்கள்  அவதிக்குள்ளாகி வருகின்றனர். 5 ஆண்டுகளாக சிதிலமடைந்து கிடக்கும் காரிய மேடையை, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.