tamilnadu

img

எட்டு வழிச் சாலைக்கு எதிராக மீண்டும் கருப்புக் கொடி

திருவண்ணாமலை:
கொரோனா ஊரடங்கு காலத்திலும், விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் சீரழிக் கும், 8 வழிச் சாலை அமைக்கத் துடிக் கும் மத்திய, மாநில அரசுகளை கண் டித்து திருவண்ணாமலை மாவட்டத் தில் கருப்பு கொடியேந்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை - சேலம் எட்டு வழிச் சாலை அமைக்கும் திட்டத்தால் சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் விளை நிலங்கள் பாழாகும். இயற்கை அரண்களாக உள்ள மலைகள் தகர்க்கப்பட்டு, கனிம வளங்கள் சூறையாடப்படும், சுற்றுச் சூழல் சீர்கேடு அடையும் என்பதால், பொதுமக்களும், விவசாயிகளும், அனைத்து அரசியல் கட்சி மற்றும் பொதுநல இயக் கங்களும் தொடர்ச்சியாக போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய பா.ஜ.க. அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் சேலம் - சென்னை 8 வழிச் சாலைத் திட்டத்திற்காக சுமார் 8 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த 8 வழிச் சாலையில் 3 குகைப் பாதைகள், 23 பெரிய பாலங்கள். 156 சிறு பாலங்கள், 578 கல்வெட்டுகள், 8 இடங்களில் சுங்கச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளது.

இதனால் 10 ஆயிரம் பாசனக் கிணறுகள், 100 குளங்கள், 6 ஆயிரம் தென்னை மற்றும் பாக்கு மரங்கள் முற்றிலுமாக அழிக்கப்படும். மேலும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் மரங்கள் வெட்டி அகற்றப்படும். பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமும் பறிபோகும். அடர்ந்த வனப்பகுதி வழியாக இச்சாலை அமைக்கப்படுவதால், சுற்றுச் சூழலுக்கு பேராபத்து ஏற்படுவதுடன், சேலம் மாவட்டத்தில் ஜருகுமலை, அருநூற்றுமலை, சேர்வராயன்மலை, சின்ன கல்வராயன் மலை, பெரிய கல்வராயன் மலை, தருமபுரி மாவட்டத்தில் சித்தேரி மலை, திருவண்ணாமலை மாவட்டத்தில் கவுந்திமலை, வேடியப்ப மலை உள் ளிட்ட 8 மலைகள் உடைத்து அழிக்கப்படும். இந்த மலைகளிலும், வனங்களிலும் வசித்து வரும் ஏராளமான வன உயிரினங்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்படும்.

“நிலம் எங்கள் உயிருக்கு நேர்” தற்கொலைக்கு முயன்ற விவசாயிகள்

 விவசாயத்தை சீரழிக்கும் இந்த 8 வழிச் சாலை அமைப்பதை கண்டித்து, திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் கிராம சபைகளை முற்றுகையிட்டு போராட்டம், கையெழுத்து இயக்கம், கண்டன ஆர்ப்பாட்டம் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட் டம் என பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.இந்த 8 வழிச் சாலை திட்டத்தை எதிர்த்து, கடந்த 2018 ஆகஸ்ட் 1 ஆம் தேதி திருவண்ணாமலை முதல் சேலம் வரையிலான  நடைபயணம் இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது. கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன் இந்த நடை பயணத்திற்கு தலைமை தாங்கினார்.

இந்த 8 வழிச் சாலை திட்டத் திற்கு, நிலம் தரமாட்டோம் என, ஏராளமான  விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடமும், நில எடுப்பு வட்டாட்சியரிடமும், எதிர்ப்பு மனுக்களை அளித்தனர். இந்த திட்டத்திற்கான நில அளவையின் போது, நடப்பட்ட குறியீடு கற்களை, பிடுங்கி எறிந்து பல்வேறு கட்ட போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.செய்யாறு அடுத்த தென்மாவந்தல் கிராம விவசாயி கிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.இந்நிலையில்,  மீண்டும் இந்த 8 வழிச் சாலை திட்டத்தை அமைக்க முயலும் அரசுகளை கண்டித்து, திருவண்ணாமலை மாவட்டத்தில்  (ஜூன்8) திங்களன்று 18 க்கும் மேற்பட்ட இடங்களில் விவசாயிகள் கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

;