திருவண்ணாமலை,அக்.14- திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வித்துறை, தமிழ்நாடு அறிவி யல் இயக்கம் இணைந்து நடத்தும் 3வது புத்தக திரு விழாவின் 4 ஆம் நாளான திங்க ளன்று(அக்.14) நடைபெற்ற நிகழ்ச்சியில், காந்தி நகர் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவி யரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாவட்ட கல்வி அலுவலர் எஸ்.கருணாக ரன் தலைமையில் நடைபெற்ற கருத்த ரங்கத்தில், பள்ளி துணை ஆய்வாளர் பா. வேங்கடசுப்பிரமணியன் வரவேற்றார், செங்கம் மகரிஷி மேல்நிலைப்பள்ளி தாளா ளர் சி.மனோகரன் வாழ்த்துரை வழங்கி னார். எண்ணும் எழுத்தும் என்ற தலைப்பில், துணைவேந்தர் ம.ராசேந்திரன் சிறப்புரை யாற்றினார், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கே.காத்தவராயன் நன்றி கூறினார்.