அவிநாசி: நள்ளிரவு மின்தடையால் பொதுமக்கள் அவதி
அவிநாசி, ஆக்.16- அவிநாசி அருகே கருவலூர் பகுதியில் நள்ளிரவு 3 மணி வரை மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். அவிநாசி ஒன்றியம், கருவலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற் பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் செவ்வாயன்று இரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை மின்தடை ஏற்பட்டது. இதனால் அப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் அவதிக் குள்ளாகினர். இதுகுறித்து பொதுமக்கள் கூறு கையில், திங்களன்று இரவு 9 மணி முதல் 11 மணி வரை மின்தடை ஏற்பட்டது. இதேபோல் செவ் வாய்க்கிழமை நள்ளிரவு 12 முதல் 3 அதிகாலை மணி வரை மின் தடை ஏற்பட்டது. இவ்வாறு எவ்வித அறிவிப்பும் இன்றி இரவு நேரங்களில் அடிக்கடி மின் தடை செய்யப்படுவதால் குழந்தைகள், முதியோர் கடும் அவதிக்குள்ளாகின்றனர். ஆகவே, மின்சார வாரியம் நள்ளிரவு நேரங்களில் மின்தடை செய்வதை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.
டெங்கு கொசுப்புழு உற்பத்தி வணிக நிறுவனத்திற்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
தருமபுரி, அக்.16 - அரூரில், டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்திக்கு காரணமாக இருந்த வணிக நிறுவனத்திற்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அரூர் பேரூராட்சிக்கு உள்பட்ட 18 வார்டு களிலும் தீவிர டெங்கு நோய் தடுப்பு பணிகள் நடை பெறுகிறது. இதில் நெகிழிப் பொருள்கள், டயர்கள், தேவையற்ற பொருள்களில் மழைநீர் தேங்குவதை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது. இந்நிலையில், அரூர்- சேலம் பிரதான சாலையில் உள்ள வணிக நிறுவனங்கள், பழைய இரும்பு கிடங்கு களில் செயல் அலுவலர் கே.சேகர் தலைமையிலான பேரூராட்சி பணியாளர்கள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது, டெங்கு கொசுப் புழுக்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, டெங்கு கொசுப் புழுக்கள் உற்பத்திக்கு காரணமாக இருந்த வணிக நிறுவனங்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக் கப்பட்டது.