tamilnadu

img

பிளஸ் 2 தேர்வில் தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்

திருப்பூர், ஏப்.19-பிளஸ்2 அரசுப் பொதுத் தேர்வில் மாநில அளவில் அதிக தேர்ச்சி விகிதம் பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடத்தைப் பெற்றது.இம்மாவட்டத்தில் மொத்தம் 95.37 சதவிகித மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஈரோடு மாவட்டம் 95.23 சதவிகிதம் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றது. பெரம்பலூர் மாவட்டம் 95.15 சதவிகிதம் பெற்று 3ஆவது இடத்தைப் பெற்றது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி இது பற்றி செய்தியாளர்களிடம் கூறியதாவது: 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக உழைத்த ஆசிரியருக்கும், மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன்.இம்மாவட்டத்தில் மொத்தம் தேர்வு எழுதியவர்கள் 24,835 பேர். இதில் தேர்ச்சியடைந்தவர்கள் 23,686 பேர். திருப்பூர் மாவட்டம் கடந்த ஆண்டு 3 ஆவது இடத்தில் இருந்து இந்தாண்டு முதல்இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2697 மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதியதில் 2404 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். அத்துடன் 45 சிறைவாசிகள் தேர்வு எழுதியதில் 34 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர் என்று ஆட்சியர் பழனிச்சாமி தெரிவித்தார்.மேலும் கோடை வெயில் கடுமையாக இருக்கும் நிலையில் தனியார் பள்ளிகளில் சிறப்புவகுப்புகள் நடத்துவது குறித்து பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவை மாவட்ட நிர்வாகம் பின்பற்றும் எனவும் தெரிவித்தார். 


மாவட்ட கல்வி அலுவலர் சாந்தி பேட்டி

வட்டம் முதலிடம் பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.இதற்கு காரணமான ஆசிரியர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.மேலும் ஆசிரியர்களின் அயராத முயற்சியால் வெற்றி பெற்றுள்ளோம்.வரும் கல்வி ஆண்டில் திருப்பூர் கல்வி மாவட்டத்தின் தேர்ச்சி சதவிகிதம் அதிகரிக்கும் எனவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி தெரிவித்தார்


;