விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து கள்ளக் குறிச்சி மாவட்டம் உருவாக்கப்படும் என கடந்த ஜனவரி 8ஆம் தேதி சட்டப்பேரவை யில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதையடுத்து வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தலைமையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள வருவாய் கிராமங்களை பிரிப்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டமும் நடத்தப்பட்டது. இதையடுத்து மாவட்ட எல்லை வரையறுப்பது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான தனி அதிகாரியாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணைச் செயலாளராக பணியாற்றிவந்த கிரண்குராலாவை நியமித்து அரசு உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டம் பிரிப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கியது.இதற்கான பணிகளை மேற்கொள்ள நிய மிக்கப்பட்டுள்ள கிரண்குராலா கடந்த ஜூலை 25ஆம் தேதி கள்ளக்குறிச்சிக்கு வந்திருந்து, வரு வாய் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி களை சந்தித்தார். பின்னர் தனி அதிகாரிக்கான அலுவலக இடம் தேர்வு தொடர்பாக கள்ளக்குறிச்சி ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் தேர்வு செய் யப்பட்டுள்ளது. புதிய மாவட்ட ஆட்சியர் அலுவல கம் உளுந்தூர்பேட்டை-கள்ளக்குறிச்சி சாலை மார்க் கத்தில் உள்ள வீரசோழபுரத்தில் அமைக்கத் திட்ட மிடப்பட்டுள்ளதாக வருவாய் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கடந்த 13ஆம் தேதி கள்ளக் குறிச்சி மாவட்டம் தொடர்பாக அரசாணை வெளி யிடப்பட்டது. அதன்படி திருக்கோயிலூர், கள்ளக் குறிச்சி ஆகிய இரு வருவாய் கோட்டங்களும், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், திருக்கோயி லூர், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் மற்றும் கல்வ ராயன்மலை என 6 வருவாய் வட்டங்களும், சங்கரா புரம், ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர் பேட்டை, திருக்கோயிலூர் என 5 சட்டப் பேரவைத் தொகுதிகளும், 558 வருவாய் கிராமங்களும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இடம் பெறும் வகையி லும் மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது. மாவட்டப் பிரிப்பின் போது, திருவெண்ணை நல்லூர் பகுதி வாசிகள் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், அதனை பரிசீலித்த வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகம், 3 பிர்காவை உருவாக்கி, 70 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி, திரு வெண்ணைநல்லூரை தனி வட்டமாக அறிவித்து, அதனை விழுப்புரம் மாவட்டத்துடன் இணைத்துள் ளது. திருக்கோயிலூர் வட்டத்திலிருந்த கண்டாச்சி புரம், அரசூர் உள்ளிட்ட 21 வருவாய் கிராமங்கள், உளுந்தூர்பேட்டை வட்டத்தில் உள்ள 24 வருவாய் கிராமங்கள்,சித்தலிங்கமடம் 25 வருவாய் கிராமங்கள் புதிய வட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
அதேபோன்று கல்வராயன்மலைவாழ் மக்களின் நலனை கருத்தில் கொண்டு, 2 பிர்காவை உருவாக்கி, சின்னசேலம் வட்டத்திலி ருந்து 26 வருவாய் கிராமங்கள், சங்கராபுரம் வட்டத்தி லிருந்து 18 வருவாய் கிராமங்களை பிரித்து 44 வரு வாய் கிராமங்களுடன் கல்வராயன்மலை எனும் தனி வட்டத்தை ஏற்படுத்தப்பட்டு, அவை கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்கப் பட்டுள்ளது. மாவட்ட எல்லை தொடர்பான அறிவிப்பு வெளி யான நிலையில், மாவட்டம் தனித்து செயல்படுவ தற்கான பணிகளை தனி அதிகாரி உடனடியாக மேற்கொள்ளவேண்டும் எனவும், அவருக்கு உறு துணையாக செயல்பட 13 தனி அலுவலர்களும் நியமிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட துவக்க விழா செவ்வாயன்று (நவ.26) கள்ளக்குறிச்சி யில் நடைபெறவுள்ளது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு 5 ஆயிரம் பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி மாவட்டத்தை துவக்கி வைக்கவுள்ளார்.
கல்வராயன்மலை தனி வட்டம்
சின்னசேலம் வட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, கல்வராயன்மலையை தனிவட்டமாக அறிவித்த நிலையில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் அமைப்பைச் சேர்ந்த வெள்ளிமலை செல்வராஜி கூறுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பிரித் தது மட்டுமின்றி, மலைவாழ் மக்களின் மன நிலையை உணர்ந்து கல்வராயன்மலையை தனி வட்டமாக அறிவித்திருப்பது மகிழ்ச்சி. இதன்மூலம் எங்கள் பிரச்சனை அரசின் பார்வைக்கு உடனடி யாக கொண்டு செல்வது எளிது. மக்களுக்கு தேவை யற்ற அலைச்சல் தவிர்க்கப்படுவதோடு, பேருந்து பயணத்துக்கான கட்டணமும் ஓரளவு குறை யும். அரசின் செயல்பாடுகள் விரைவாக்கப்பட வேண்டும். அவை மலைவாழ் மக்களை சென்றடை கிறதா என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். குறிப்பாக கல்வராயன்மலையை சுற்று லாத் தலமாக அறிவித்து, சுற்றுலா பயணிகள் வந்து செல்ல ஏதுவான பொழுதுபோக்கு அம்சங் களை ஏற்படுத்த புதிய மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டும் என்றார்.
முதலமைச்சர் தலைமையில் விழா
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காலை 11 மணிக்கு கள்ளக்குறிச்சியில் புதிய மாவட்டத்தை துவக்கி வைத்தும், பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவுபெற்ற பல திட்டங்களை தொடங்கி வைத்தும், நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி உரை யாற்றுகிறார். விழாவில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் சி.வி.சண் முகம், உதயகுமார், வேலுமணி, அன்பழகன் உள்ளிட்ட அனைத்துத்துறை அமைச்சர்களும், பல்வேறு அரசுத் துறைகளின் உயர் அதிகாரி கள், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக நிய மிக்கப்பட்டுள்ள கிரண்குராலா, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்கின்றனர். மேலும் சுமார் 9 ஆயிரம் பயனாளி களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல் வர் இன்று வழங்குகிறார்.