tamilnadu

img

போராட்டக்காரர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு திருப்பூரில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் பரபரப்பு

திருப்பூர், மார்ச் 5 - திருப்பூரில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து கடந்த  19 நாட்களாக தொடர்தர்ணா  போராட்டம் நடைபெற்று வரும்  நிலையில், அவர்களைக் கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து அறி வொளி சாலை போராட்டக் களத்தில் ஆண்கள், பெண்கள் என  ஆயிரக்கணக்கான இஸ்லாமியர் கள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. குடியுரிமை திருத்தச் சட்டம்,  என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றை  எதிர்த்து திருப்பூர் செல்லாண்டி யம்மன் துறை பகுதியில் இருந்து காங்கேயம் சாலைக்குச் செல்லும் அறிவொளி சாலையில் கடந்த 19  நாட்களாக தொடர் தர்ணா போராட்டம் நடைபெற்று வரு கிறது. இளைஞர் கூட்டமைப்பு, குடி யுரிமைப் பாதுகாப்புக் கூட்ட மைப்பு ஆகியஅமைப்புகளின் சார்பில் நடைபெற்று வரும்  இந்த தொடர் தர்ணா போராட் டத்தில் ஒவ்வொரு நாளும் சுமார்  2 ஆயிரம் பேர் வரை பங்கேற்று வரு கின்றனர். தமிழக அரசு என்பிஆர்  எனப்படும் மக்கள்தொகை பதி வேடு, என்ஆர்சி எனப்படும் குடி மக்கள் பதிவேடு ஆகியவற்றை  அமல்படுத்த மாட்டோம் என சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி இப் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

வழக்கு
இந்நிலையில், திருப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் கோபிநாத் என்பவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கின் அடிப்படையில், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடுவர்களை கைது செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் வியாழனன்று உத்தர விட்டிருப்பதாக ஊடகங்கள் மூலம்  செய்தி பரவியது. எனவே அறி வொளி சாலையில் போராட் டத்தில் ஈடுபட்டிருப்போரை  காவல் துறையினர் கைது செய்யப் போகின்றனர் என்ற தகவல் காட்டுத்  தீ போல பரவியது. இதையடுத்து அறிவொளி சாலை போராட்டக் களத்தில் இருந்த சுமார் 300 பேர் மட்டுமின்றி,  பல்வேறு பகுதிகளில் இருந்தும்  இஸ்லாமிய இளைஞர்கள்,  பெண்கள் என ஆயிரக்கணக் கானோர் அந்த இடத்துக்கு அணி திரண்டு வந்தனர். போராட்டப் பந்தலில் குவிந்து தர்ணாவில் ஈடு பட்டனர். இது குறித்து செய்தியாளர்க ளிடம் பேசிய போராட்டக் குழுவின்  ஒருங்கிணைப்பாளர் ரகுமான், எங்களை கைது செய்தாலும்  அதற்கு தயாராக இருக்கிறோம்.  எங்களை கைது செய்து மண்டபங் களில் அடைக்காமல் சிறைச்சாலை களில் அடைக்க வேண்டும். எப் போது விடுதலைஆனாலும்,  மீண்டும் போராட்டத்தைத்  தொடருவோம் என்று கூறினார். அத்துடன், சென்னை உயர் நீதி மன்றம் எங்கள் தரப்புவாதத்தை  கேட்காமல் அளித்துள்ள இந்த  உத்தரவு மன உளைச்சலை ஏற் படுத்தி இருக்கிறது என்றும் போராட்டக் குழுவினர் கூறினர். அதேசமயம் இந்த போராட்டக் குழுவினர் காவல்துறையினரைத்  தொடர்பு கொண்டபோது நீதி மன்ற உத்தரவு தொடர்பாக காவல்  துறைக்கு எழுத்துப்பூர்வ ஆணை  இதுவரை கிடைக்கவில்லை என்று  தகவல் தெரிவித்ததாகவும் கூறினர்.  இந்நிலையில் மாலை5 மணிக்கு  திருப்பூர் வடக்கு காவல் நிலை யத்தில் அமைதிப் பேச்சுவார்த் தைக்கும் காவல் துறையினர் அழைப்பு விடுத்திருந்தனர். நீதி மன்ற உத்தரவு அடிப்படையில் எப்போது வேண்டுமானாலும் நடவடிக்கை எடுக்கக்கூடும் என்ற  நிலையில் திருப்பூர் அறிவொளி  சாலை போராட்டக் களத்தில்  ஆயிரக்கணக்கானோர் தர்ணா  போராட்டத்தைத் தொடர்ந்து வந்தனர்.

;