tamilnadu

img

திருப்பூர் காட்டன் மார்க்கெட் தினசரி சந்தை நீரில் மூழ்கியது

திருப்பூர், செப். 1 – திருப்பூர் காட்டன் மார்க்கெட் வளாகத்தில் அமைக்கப்பட்ட தின சரி சந்தை திங்களன்று பெய்த கன மழையால் நீரில் மூழ்கி காய்கறிகள் விரயமானது. திருப்பூர் மாநகரில் பழைய பேருந்து நிலையம் எதிரே காமராஜ் சாலையில் காய்கறி சந்தை சுமார் 300க்கும் மேற்பட்ட கடைகளுடன் செயல்பட்டு வந்தது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் அடிப்படையில் அங்கு வணிக வளாகங்கள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. எனவே அங்கு செயல்பட்டு வந்த காய்கறி சந்தை பழைய பேருந்து நிலையம் எதிரே காட்டன் மார்க்கெட் வளா கத்துக்கு மாற்றப்பட்டது.  அங்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சரியில்லை என்று அங்கு செல்வதற்கு வியாபாரிகள் தயக்கம் காட்டினர். மாநகராட்சி அதிகாரி கள், சட்டமன்ற உறுப்பினர் பேச்சு வார்த்தை நடத்தி அங்கு வியாபா ரிகள் செல்வதற்கு ஒப்புக்கொள்ள வைத்தனர்.  

இந்நிலையில் திங்க ளன்று இரவு திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த கனமழை  காரணமாக காட்டன் மார்க்கெட் வளாகத்தில் செயல்பட்டு வரும் காய்கறி சந்தை யில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. முழங்கால் அளவு தேங்கியிருக்கும் இந்த மழை நீரால் காய்கறி வியா பாரிகளும், அந்த மார்க்கெட் பகு திக்கு வரும் சிறு வியாபாரிகளும், பொது மக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்.  மார்க்கெட் பகுதிகளில் தரையில்  வைத்திருந்த கொத்தமல்லி, புதினா, கீரை வகைகள் மற்றும் பல்வேறு காய்கறிகள் மழை நீரில் மூழ்கி விர யமானது. இதன் பிறகு மாநகராட்சி அதிகாரிகள் அங்கு வந்து மழைநீரை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர்.  ஒரு நாள் மழைக்கு இந்த நிலைமை என்றால் வரும் காலங்களில், சந்தை பாதிக்காமல் இருக்க அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் என்றும் காய்கறி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;