tamilnadu

img

அவிநாசி அருகே பழமையான நடுகல் கண்டுபிடிப்பு

அவிநாசி, ஜூன் 12- அவிநாசி அருகேயுள்ள சேவூரில்    நாயக்கர் காலத்து பழ மையான நடுகல் கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்து சேவூரில் புளி யம்பட்டி செல்லும் சாலை சீரமைப்புப் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், சாலை யின் ஓரமாக பழமையான சிற்பம் ஒன்று கண்டெடுக்கப் பட்டது.   இதையடுத்து ,சேவூர்  வருவாய் ஆய்வாளர் ராமசாமி மற்றும் சேவூர் தனிப்பிரிவு காவலர் வெள்ளியங்கிரி ஆகி யோர் உடனடியாக சென்று ஆய்வு செய்தபோது அது பழ மையான நடுகல் என்பது தெரியவந்தது.  

இதையடுத்து, பொக்லைன் இயந்திரம் மூலமாக அந்த நடுகல்லை எடுத் துச் சென்று சேவூரில் உள்ள பெருமாள் கோவிலில் வரு வாய்த் துறையினரின் பாதுகாப்பில் வைத்தனர். இந்த நடுகல்லில் கீழ்ப்புறம் போர் நடப்பது போன்ற காட்சியும், மேல்புறம் போரில் இறந்தவர்கள் சொர்க்கத் தில் இறைவனை வழிபடுவது போன்ற காட்சியும்  செதுக்கப் பட்டுள்ளது.  இதை வைத்துப் பார்க்கும்போது இந்த நடுகல் நாயக்கர் காலத்து கல்வெட்டாக  இருக்கலாம் என்றும், இது குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.  சேவூர் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில்  பழமை வாய்ந்த கோவில், மிகப் பழமையான கல்வெட்டுகள், நடுகல் மற்றும் சிற்பங்கள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருவது குறிப் பிடத்தக்கது.

;