உடுமலை, ஜூன் 19- சலவை தொழிலாளர்களுக்கு அயன் பாக்ஸ் உள்ளிட்ட உபகரணங்களை தமிழக அரசு வழங்க வலியுறுத்தி புதனன்று மடத்துகுளம் சிஐடியு அலுவலகத்தில், மடத்துக்குளம் தாலுகா சிஐடியு சலவை தொழிலாளர் சங்க அமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், சலவை தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். அனைத்து தொழி லாளர்களுக்கும் அயன் பாக்ஸ், தள்ளு வண்டி உள்ளிட்ட உபகரணங்களை தமிழக அரசு வழங்க வேண்டும். ஐம்பது வயது பூர்த்தியடைந்த பெண்களுக்கு நலவாரிய திட்டத்தின் மூலம் ரூ.3ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக எஸ்.என். பாலசுப்பிரமணியன், செயலாளராக எம்.சண்முகம், பொருளாராக எம்.பரிமளம், துணை தலைவ ராக சந்திரன், மீனாட்சி, துணை செயலாளர்களாக குப்பு சாமி, வசந்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக இந்த கூட்டத்தில் சிஐடியு மாவட்டத் துணை செயலாளர் எஸ். ஜெகதீசன், உடுமலை தாலுகா பொது தொழிலாளர் சங்கத்தின் தலைவர் வெ.ரங்கநாதன், மடத்துகுளம் சிஐடியு நிர்வாகிகள் பன்னீர் செல்வம், ஆர்.வீ.வடிவேல் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.