tamilnadu

img

உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிடுக விவசாயிகள் குடை பிடித்துப் போராட்டம்

திருப்பூர், ஜூன் 29- திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் உயர்மின் கோபுரங்க ளால் பாதிக்கப்பட்ட உழவர்கள் நிலத் திற்கு கோவை மாவட்ட ஆட்சியரின் வழிமுறையை பின்பற்றி இழப்பீடு நிர்ணயம் செய்து தரக்கோரி விவசாயி கள் குடைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்தில் திங்களன்று உயர் மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட வர்கள் நிலத்திற்கு சட்டப்படி கோவை மாவட்ட ஆட்சியர் வழிமுறையை பின் பற்றி இழப்பீடு நிர்ணயம் செய்து தரக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், கடந்த 9 மாத மாக இந்தக்கோரிக்கைக்காக மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை நேரில் சந்தித்து வலியுறுத்திய பின் னும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. இந்த  சூழ்நிலையில் காவல்துறையை பயன்படுத்தி உயர் மின்கோபுரம் அமைக்கும் பணியும் நடந்து வரு வதால் வேறு வழியின்றி பாதிக்கப்பட் டவர்கள் கூட்டு இயக்க நிர்வாகிகள் உடன் இணைந்து கோரிக்கையை வலியுறுத்தும் வண்ணம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீண்ட நேரம் அமர்ந்து இருந்தனர்.

பின்பு, திருப்பூர் வருவாய் கோட் டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சிய ரின் நேர்முக உதவியாளர் ஆகியோ ருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த பிரச்சனைக்கு இன்னும் மூன்று நாட்களுக்குள் உரிய வகையில் பதிலை அளிப்பதாகவும், இந்த பிரச் சனை சம்பந்தமாக பேசுவதற்காக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நாடா ளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், பவர் கிரிட் நிறுவனத்தினர், வருவாய்த் துறையினர் உள்ளடக்கிய பேச்சு வார்த்தையை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து தெரிவிப் பதாகவும் உறுதியளித்ததன் பேரில் பாதிக்கப்பட்ட விவசாயிகளும், நிர்வாகிகளும் கலைந்து சென்றனர். இக்கோரிக்கைகளை  பொருட்ப டுத்தாவிடில் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்திற்கு ஆடு, மாடுகளுடன் கோரிக்கை நிறைவேறும் வரை நிரந்த ரமாக குடியேறுவது எனவும் தீர்மா னிக்கப்பட்டது.

;