tamilnadu

img

வாகனச் சோதனையில் காவல்துறை அராஜகம்

அவிநாசி, அக். 4- அவநாசி அருகே வாகன சோதனை யில் ஈடுபட்டிருந்த காவல் துறையி னர் வாகன ஓட்டிகளை தாக்கி அரா ஜகமாக நடந்து கொண்டதற்கு பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதையடுத்து பொதுமக்களிடம் காவலர்கள் மன்னிப்பு கேட்டனர். அவிநாசி ஒன்றியம், பூண்டி பேரூ ராட்சிக்குட்பட்ட அம்மாபாளையத் தில் காவல் துறையினர் வாகன சோத னையில் ஈடுபட்டிருந்தனர். இப்பகுதி யில் நாள்தோறும் மாலை நேரங்களில் காவல்துறை வாகனச் சோதனையில் ஈடுபடுவது வாடிக்கையாகும். இந்த நிலையில் வெள்ளியன்று மாலை திருப்பூரிலிருந்து இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டி ருந்தனர். அப்பொழுது வாகனத் தணிக் கையில் இருந்த காவலர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த  நபர்கள் மீது தன் கையில் வைத்திருந்த லத்தியால் ஓங்கி அடித்தார்.  இதில் நிலைகுலைந்த வாகன ஓட்டி தனது வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு. காவலரிடம் வாகன ஓட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். காவலர்களின் காட்டுமிராண்டித் தனத்தால் அதிருப்தியடைந்த அருகில் இருந்த பொதுமக்களும்  காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இத னையடுத்து காவலர் மன்னிப்பு கேட்ட பின்பு கலைந்து சென்றனர்.