tamilnadu

img

திருப்பூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பயிற்சி முகாம்

திருப்பூர், பிப். 8 – திருப்பூர் மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற கிரா மப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக் குழு அலுவலகத்தில் சனிக்கிழமை காலை இந்த முகாம் நடைபெற் றது. அவிநாசி ஊராட்சி ஒன்றி யக்குழு உறுப்பினரும், கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினருமான பி.முத்துசாமி தலைமை ஏற்றார். உடுமலைபேட்டை ஒன்றியக்குழு செயலாளர் கி.கனகராஜ் வர வேற்றார். இம்முகாமில் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஊரக உள்ளாட்சி துறை தலைவ ரும், பேராசிரியருமான க.பழனி துரை பங்கேற்று உள்ளாட்சி மன்றங்களின் நோக்கம், அவற் றிற்கு இருக்கும் அதிகாரம், மக் கள் பிரதிநிதிகளின் உரிமைக ளும், கடமைகளும் குறித்து விரி வாக விளக்கிப் பேசி, பயிற்சி அளித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பி னர் கே.தங்கவேல் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகளுக்குப் பாராட்டுத் தெரிவித்து உள்ளாட்சிகளில் மக் கள் பணி ஆற்றுவதன் முக்கியத் துவம் குறித்துப் பேசினார். பணி நிறைவு பெற்ற வட் டார வளர்ச்சி அலுவலர் து.இராஜ கோபாலன் ஊராட்சி ஒன்றியத் திலும், கிராம ஊராட்சிகளிலும் மக்கள் பிரதிநிதிகளின் பணிகள் குறித்து விளக்கிப் பேசி பயிற்சி  அளித்தார். இதில் இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவர் கே.கணேசன், வள்ளிபுரம் ஊராட்சிமன்றத் தலை வர் முருகேசன் மற்றும் கிராம ஊராட்சிகளில் வார்டு உறுப்பி னர்களாக வெற்றி பெற்றவர்கள் பங்கேற்றனர். மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் செ.முத் துக்கண்ணன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.உண்ணி கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற் றனர். நிறைவாக மார்க்சிஸ்ட் கட்சியின் அவிநாசி ஒன்றியச் செயலாளர் எஸ்.வெங்கடாசலம் நன்றி கூறினார்.

;