tamilnadu

img

திருப்பூரில் எழுச்சிமிகு மறியல் கே.பாலகிருஷ்ணன் கைது

திருப்பூர், ஜன. 8 – மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் அறிவித்த பொது வேலைநிறுத்தப் போராட் டத்துக்கு ஆதரவாகவும், குடியு ரிமைச் சட்டத்தை கைவிட வலியு றுத்தியும் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புதனன்று மாபெரும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத் தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் உள்பட ஆயிரக்க ணக்கானோர் பங்கேற்று கைதா கினர் திருப்பூர் தியாகி குமரன் சிலை முன்பாக புதனன்று காலை  திமுக, மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சிஐடியு, ஏஐடியுசி, எல்பி எப், ஐஎன்டியுசி, எச்எம்எஸ், எம் எல்எப் ஆகிய தொழிற்சங்கங் களைச் சேர்ந்தோர் குவிந்தனர். மத்திய மோடி அரசின் தொழி லாளர் விரோத கொள்கைகள், மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப் பட்டன. இப்போராட்டத்தில் மார்க் சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் பங் கேற்று மத்திய, மாநில ஆட்சி யாளர்களின் கொள்கைகளைக் கண்டித்து உரையாற்றினார். இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்டச் செயலாளர் எம்.ரவி, திமுக மாநகரச் செயலா ளர் மு.நாகராசன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் ஆர்.கிருஷ்ணன், பி.கோபி, மதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் சு.சிவபாலன் மற்றும் தொழிற் சங்க நிர்வாகிகள் சிஐடியு மாவட் டத் தலைவர் கே.உண்ணிகிருஷ் ணன், மாவட்டச் செயலாளர் கே. ரங்கராஜ், துணைச் செயலாளர் ஜி.சம்பத்,ஏஐடியுசி தலைவர் சி.பழனிச்சாமி, செயலாளர் என். சேகர், ஏ.ஜெகநாதன், எல்பிஎப் தலைவர் க.ராமகிருஷ்ணன், சிதம் பரசாமி, ஐஎன்டியுசி தலைவர் ஏ.பெருமாள், ஏ.சிவசாமி, வி.ஆர். ஈஸ்வரன், எச்எம்எஸ் செயலாளர் ஆர்.முத்துசாமி, முருகன், குண சீலன், எம்எல்எப் சார்பில் மு.சம் பத், மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். குமரன் சிலை முன்பிருந்து  மத்திய, மாநில ஆட்சியாளர்க ளுக்கு எதிராக முழக்கமிட்டபடி ஊர்வலமாக ரயில் நிலையம் பேருந்து நிலையம், ஊத்துக்குளி சாலை, மேம்பாலம் சந்திப்பில் தலைமை தபால் நிலையம் முன் பாக அணிவகுத்தனர். குமரன் வணிக வளாகம் முன்பாக தடுப்பு களை ஏற்படுத்தி காவல்துறை யினர் மறியல் போராட்டத்தில் பங்கேற்ற 200க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 700 பேரை கைது செய்தனர்.
அவிநாசி
அவிநாசி அருகே பயணியர் விடுதி முன்பு புதனன்று தொழிற் சங்கத்தினர் மத்திய, மாநில அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சிஐடியு சங்கத்தின் சார்பில் ஒன்றிய கவுன்சிலர் முத்துச்சாமி, ஈஸ்வரமூர்த்தி, வேலுச்சாமி, கன கராஜ், ராஜன், சண்முகம், வெங்க டாசலம், ஏஐடியுசி சார்பில் இசாக், கோபால், சுப்பிரமணி, செல்வ ராஜ், விஜயராகவன், மோகன், எல் பி எஃப். மோகன் குமார், எம் எல் எ ப். பெருமாள், ஐஎன்டியுசி சாய் கண்ணன், கோபாலகிருஷ் ணன் உள்ளிட்ட பல முக்கிய நிர் வாகிகள் கலந்து கொண்டனர்.
காங்கேயம்
புதனன்று காங்கேயத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் திருவேங்கடசாமி தலைமையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் சாலை மறிய லில் ஈடுபட்டனர். காங்கேயம் பஸ் நிலையம் முன்பாக ரவுண்டானா பகுதியில் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் தாலுகா குழு உறுப்பினர்கள் குமாரசாமி, வேலுச்சாமி, ராதா கிருஷ்ணன் மற்றும் சிஐடியு, அங்கன்வாடி,எல்பிஎப் உள் ளிட்ட தொழிற்சங்கத்தினர் திரளா னோர் பங்கேற்றனர். இதில் சுமார் 50 பெண்கள் உள்பட 105 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஊத்துக்குளி
ஊத்துக்குளி ரயில் நிலையத் தில் ரயில் மறியல் போராட்டம் அனைத்து தொழிற்சங்கம் சார் பில் நடைபெற்றது. இப்போராட் டத்திற்கு சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ஜெ.கந்த சாமி, ஏஐடியுசி ஊத்துக்குளி ஏரியா தலைவர் கே.கே.குமரன் ஆகியோர் தலைமை வகித்த னர். இப்போராட்டத்தை சிஐடியு மாநில துணைத் தலைவர் எம். சந்திரன் துவக்கி வைத்து உரை யாற்றினார். இப்போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.குமார்,  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (சிபிஐ) மாவட்ட செயலாளர் சின்னசாமி, சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர்கள் வி.கே.பழனி சாமி, கண்ணையன், மகேந்திரன், தமிழ்மாநில விவசாய தொழிலா ளர் சங்க மாவட்ட செயலாளர் வி. பி.பழனிச்சாமி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் ஆர்.மணி யன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் கே. ஏ.சிவசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் வி.கே. முத்துச்சாமி, இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் எம்.செந்தில்குமார், நகர தலைவர் ரங்கசாமி, எல்.பி.எப். சங்கத்தில் தங்கவேல், அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட துணைச்செயலாளர் கே. சரஸ்வதி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தாலுகா செயலா ளர் க.லெனின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக ஊர்வலமாக வந்தவர்களை ஊத்துக்குளி ரயில் நிலைய நுழைவு வாயிலில் காவல்துறை யினர் வழிமறித்து சுமார் 25 பெண் கள் உள்பட நூறு பேரை கைது செய்தனர்.
பல்லடம்
பல்லடத்தில் பேருந்து நிலை யம் எதிரில் கோவை – திருச்சி நெடுஞ்சாலையில் மத்திய தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் சிஐடியு துணைத் தலைவர் ப.கு.சத்திய மூர்த்தி துவக்கி வைத்துப் பேசி னார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க நிர்வாகி முருகசாமி, சிடிசி பழனிச் சாமி, சக்திவேல், ஏஐடியுசி நிர் வாகி சாகுல் அமீது, மணி, எல்பிஎப் சார்பில் அந்தோணி சாமி, முத்துசாமி உள்ளிட்டோர் தலைமை ஏற்றனர். இதில் அங் கன்வாடி, சிஐடியு, ஏஐடியுசி, எல் பிஎப் உள்ளிட்ட தொழிற்சங்கத் தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.மறியலில் ஈடு பட்ட 50க்கும் மேற்பட்ட பெண் கள் உள்பட 120 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
உடுமலை
.உடுமலை மத்திய பேருந்து நிலையத்தின் முன்பு உள்ள தேசிய நெடுச்சாலையில் அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடை பெற்றது. இந்த மறியல் போராட் டத்திற்கு ஏஐடியுசி தொழிற்சங் கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் வி. செளந்தர்ராஜன் தலைமை வகித்தார். சிஐடியு சங்கத்தின் மாவட்டத்துணை செயலாளர்கள் எஸ். ஜெகதீசன், எல்லம்மாள், சிஐ டியு பஞ்சாலை சங்கத்தின் ஜெயபி ரகாஷ், செல்வராஜ், போக்குவ ரத்து சங்கத்தின் விஸ்வநாதன், கட்டிட சங்கத்தின் பழனிசாமி, மோட்டார் சங்கத்தின் சுதா சுப்பிர மணியம், உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின் ஈஸ்வரன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் சி. சுப்பிரமணியம், எஸ். ஆர். மதுசூதனண், மாவட்டக்குழு உறுப்பினர்கள் வெ.ரங்கநாதன், என். சசிகலா, பஞ்சலிங்கம், கி.கன கராஜ் மற்றும் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் தாலுகா செய லாளர் ரணதேவ், ஒன்றியக்குழு உறுப்பினர் குருவம்மாள், சுப்பிர மணியன்,எல்பிஎப் சங்கத்தின் ஜெயராஜ், நாகமாணிக்கம். ஐ என்டியுசி சங்கத்தின் ராஜ்குமார், எம்எல்எப் சங்கத்தின் ஈஸ்வரன் உள்ளிட்ட திராளான தொழிலா ளர்கள் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு கைதாகினர்
தாராபுரம்
தாராபுரம் வட்டாசியர் அலுவ லகம் முன்பு ஐஎன்டியுசி நிர்வாகி ராஜேந்திரன் தலைமையில் சாலைமறியல் போராட்டம் நடை பெற்றது. இதில் திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலை வர் வழக்கறிஞர் தென்னரசு, சிஐ டியு மாவட்ட துணை தலைவர் என்.கனகராஜ், விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் ஆர்.வெங்கட் ராமன், சிஐடியூ மாவட்டக்குழு உறுப்பினர் பி.பொன்னுச்சாமி, போக்குவரத்து ஊழியர் சங்க திருப்பூர் மண்டல துணை தலை வர் டி.ராமசாமி, ஓய்வு பெற்றோர் நல அமைப்பு தாலுகா செயலாளர் நடராஜன், சிஐடியூ மின்வாரிய நிர்வாகி சுப்பிரமணி, சிஐடியூ குடிநீர் வடிகால்வாரிய நிர்வாகி அய்யாவு, திமுக தொழிற்சங்கம் சார்பில் திருப்பூர் மண்டல தலை வர் கே.கே.துரைசாமி, திருப்பூர் மாவட்ட துணை தலைவர் அந் தோணிசாமி, ஏஐடியுசி நிர்வாகி ரகுபதி உள்பட 200 க்கும் மேற்பட் டோர் பங்கேற்று சாலைமறியலில் ஈடுபட்டனர்.

;