tamilnadu

img

அடிப்படை வசதிகளை மேம்படுத்திடுக - மார்க்சிஸ்ட் கட்சி மனு

திருப்பூர், ஆக.19- திருப்பூர் மாநகரில் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநகராட்சி அலுவலகத்தில்  செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு மாநக ரக்குழு சார்பில் மாநகரச் செயலாளர் (பொறுப்பு) பி.ஆர்.கணேசன், மாவட் டக்குழு உறுப்பினர்கள், மாநகரக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மாந கராட்சி ஆணையாளரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது, திருப்பூர் வடக்கு மாநகர பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக பத்து நாட் களுக்கு ஒருமுறை என குடிநீர் வரு கிறது. எனவே வாரம் இருமுறை குடிநீர் வழங்க வேண்டும். நான்கா வது திட்ட குடிநீர் பணிகளுக்காக பல்வேறு பகுதிகளில் குழாய் பதிப் பதற்காக சாலையில் தோண்டப் பட்ட குழிகளை சரிசெய்து போக்கு வரத்திற்கு பயன்படும் வகையில் சரிப்படுத்த வேண்டும். பாதாள சாக் கடை இல்லாத பகுதிகளுக்கும் உட னடியாக பாதாள சாக்கடை அமைக்க வேண்டும்.  கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பகுதிகளில் குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு குறித்து முன்னறிவிப்பு கொடுத்து இணைப்பு வழங்க வேண்டும். தற்போது கான் கிரீட் சாலைகள் அமைக்கும் பகுதி களில் வடிகால் கட்டிமுடிக்கப்பட்டு மேல் மூடி போட வேண்டும். சாலைப் பணிகள், குழாய் பதிக்கும் பணிகள் தொடங்குவதற்கு இரண்டு நாட்க ளுக்கு முன் அறிவிப்பு பலகை வைக் கப்பட்டு மாற்றுப்பாதை ஏற்படுத்த வேண்டும். மின் இணைப்பு கேபிள் நிலத்திற்கு அடியில் செல்லும் வகை யில் திட்டமிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியு றுத்தப்பட்டது.

;