அவிநாசி, செப். 23- சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத் தில் 2147 மூட்டைகள் வந்தி ருந்தன. குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக் கடலை ரூ.6,850 முதல் ரூ.7,450 வரையிலும், இரண்டாவது ரக நிலக் கடலை ரூ.6,100 முதல் ரூ.6,600 வரையிலும், மூன் றாவது ரக நிலக்கடலை ரூ. 5,600 முதல் ரூ.5,900 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.40 லட்சத் திற்கு ஏலம் நடைபெற்றது. இதில் 18 வியாபாரிகள், 169 விவசாயிகள் பங்கேற்றனர்.